For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 ஆண்டுகள் கழித்து.. பிளே-ஆஃப் போன டெல்லி கேபிடல்ஸ்.. இந்த வெற்றிக்கு காரணம் இவங்க தான்!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரில் சென்னைக்கு அடுத்து, இரண்டாவது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 46வது லீக் போட்டியில் வீழ்த்தி, பிளே-ஆஃப் இடத்தை உறுதி செய்தது டெல்லி.

கடந்த 6 ஐபிஎல் தொடர்களில் பிளே-ஆஃப் செல்ல முடியாமல் தவித்து வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த ஆண்டு பல மாற்றங்களை செய்து, திட்டமிட்டு பிளே-ஆஃப் சென்றுள்ளது. அப்படி என்ன தான் செய்தார்கள்?

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து எந்த நிதியும் பெறவில்லை... சச்சின் விளக்க கடிதம் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து எந்த நிதியும் பெறவில்லை... சச்சின் விளக்க கடிதம்

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

இந்த அணி செய்த மிக முக்கிய மாற்றம் இதுதான். டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை தூக்கிப் போட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாமல் டெல்லி கேபிடல்ஸ் என ஒரு பெயரை சூட்டிக் கொண்டது.

என்ன பெயர் இது?

என்ன பெயர் இது?

மற்ற அணிகள் எல்லாம் தங்கள் அணியின் ஊர் பெயருடன், விளையாட்டு, வெற்றி, உயர்வு அல்லது வீரத்தை குறிக்கும் வகையில் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ், கிங்ஸ் லெவன், ராயல்ஸ் என பெயர் வைத்திருக்க சம்பந்தமே இல்லாமல் "டெல்லி கேபிடல்ஸ்" என ஒரு பெயர் வைத்தனர்.

கிண்டல்

கிண்டல்

இதை டெல்லி நாட்டின் தலைநகரம் என்பதாக புரிந்து கொள்வதா? அல்லது இது ஏதும் முதலீடு (கேபிடல்) சம்பந்தமான விளம்பரம் என எடுத்துக் கொள்வதா என ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆனால், பெயர் மாற்றம், அணியின் சூழ்நிலையை, எண்ண ஓட்டத்தை மாற்றும் என்ற அவர்களது கணிப்பு வெற்றி பெற்றது.

ஏலத்தில் தெளிவு

ஏலத்தில் தெளிவு

அடுத்து வீரர்கள் தேர்வில் கவனமாக எந்த வெளிநாட்டு வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்காக பாதியில் வெளியேறுவார்களோ, அவர்களை ஏலத்தில் எடுக்கவில்லை. பல அணிகளிலும் உலகக்கோப்பை அணிக்கு தேர்வாகி இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி விட்டனர் அல்லது வரும் நாட்களில் கிளம்பி விடுவார்கள்.

குழப்பம் இல்லை

குழப்பம் இல்லை

ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரர்கள் யாரும் தங்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டிய தேவை இல்லை. மற்ற அணிகள் தொடர் துவங்கியது முதல் இந்த விஷயத்தால் குழப்பத்தில் இருந்தது. ஆனால், டெல்லி அணிக்கு எந்த குழப்பமும் இல்லை.

பாண்டிங் அனுபவம்

பாண்டிங் அனுபவம்

இந்த அணித் தேர்வுக்கு பின் நிச்சயம், டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தான் இருப்பார் என தெரிகிறது. அவரது அனுபவத்தை வீரர்கள் தேர்வில் மட்டுமின்றி, இந்த முறை எப்படியும் அணியை பிளே-ஆஃப் கொண்டு சென்றுவிட வேண்டும் என ஒவ்வொரு விஷயத்திலும் காட்டினார்.

தவானை மாற்றினார்

தவானை மாற்றினார்

உதாரணத்திற்கு, ஷிகர் தவான் தொடரின் துவக்கத்தில் அதிக ரன் சேர்த்தாலும், ஸ்ட்ரைக் ரேட் மோசமாக இருந்தது. அதை வெளிப்படையாக விமர்சித்த பாண்டிங், என்ன செய்தாரோ, அதன் பின் தவான் அதிரடிக்கு மாறியதோடு, போட்டிக்கு போட்டி ரன் மழை பொழிந்தார்.

கங்குலியின் புரிதல்

கங்குலியின் புரிதல்

டெல்லி அணி இந்த ஆண்டு புது முயற்சியாக ரிக்கி பாண்டிங்குடன், சேர்ந்து பணியாற்ற கங்குலியை ஆலோசகராக நியமித்தது. இந்த முயற்சி பெரிய அளவில் இந்திய வீரர்கள் இடையே மாற்றத்தை உண்டாக்கி உள்ளது. மேலும், இந்திய சூழ்நிலைகளை பாண்டிங்கை விட கங்குலி அதிகம் புரிந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இளம் கேப்டன்

இளம் கேப்டன்

இந்த வெற்றிப் பாதைக்கு மற்றொரு முக்கிய காரணம், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். இளம் வீரரான இவர், இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்குமா என ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டு இருப்பவர். டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை கடந்த சீசனில் பாதியில் ஏற்றார்.

கேப்டன் உதாரணம்

கேப்டன் உதாரணம்

இந்த சீசனில் கேப்டன்சியில் சில தவறுகள் செய்திருந்தாலும், ஒட்டு மொத்தத்தில் சிறப்பாகவே செயல்பட்டார் ஸ்ரேயாஸ் ஐயர். குறிப்பாக, கேப்டனாக மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக போட்டிக்கு, போட்டி ரன் குவித்து அசத்தினார்.

வீரர்கள்

வீரர்கள்

வீரர்கள் அளவில் துவக்க வீரர் தவான், வேகப் பந்துவீச்சாளர் ரபாடா, சில போட்டிகளில் மிரட்டிய ரிஷப் பண்ட் கட்டுக்கோப்பாக பந்து வீசிய இஷாந்த் சர்மா ஆகியோர் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Story first published: Sunday, April 28, 2019, 21:46 [IST]
Other articles published on Apr 28, 2019
English summary
IPL 2019 DC vs RCB : Delhi Capitals reached Play-off after name change
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X