“திருமணத்தை மறக்க வேண்டும்”.. விராட் கோலியின் மோசமான ஃபார்ம்.. வாகன் கூறிய முக்கிய அட்வைஸ்!

மும்பை: விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வருவதற்காக முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுவிட்டால் ப்ளே ஆஃப் இடத்தை உறுதி செய்துவிடும்.

ஹங்கர்கேகருக்கு சிஎஸ்கே கொடுத்த கௌரவம்.. பெரிய அந்தஸ்தை காப்பாற்றுவாரா? வேற லெவல் லக்ஹங்கர்கேகருக்கு சிஎஸ்கே கொடுத்த கௌரவம்.. பெரிய அந்தஸ்தை காப்பாற்றுவாரா? வேற லெவல் லக்

கவலையில் ரசிகர்கள்

கவலையில் ரசிகர்கள்

இதுவரை அந்த அணி 12 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 2போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் தகுதியை பெற்றுவிடலாம். இப்படி ஆர்சிபி கலக்கி வரும் போதும், ரசிகர்களுக்கு விராட் கோலியின் ஃபார்ம் குறித்த கவலை மாறவில்லை.

கோலியின் ஃபார்ம்

கோலியின் ஃபார்ம்

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 216 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் வெரும் 111.3 மட்டுமே ஆகும். இந்த ரன்களையும் அவர் நிலையான ஆட்டத்தால் பெறவில்லை. தொடர்ச்சியாக 3 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதனால் இன்றாவது அவர் ஜொலிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்.

மைக்கேல் வாகன் அட்வைஸ்

மைக்கேல் வாகன் அட்வைஸ்

இந்நிலையில் இதற்கு வாகன் அட்வைஸ் கூறியுள்ளார். அதில், விராட் கோலியிடம் டூப்ளஸிஸ் பேசியிருப்பார் என நம்புகிறேன். கோலி 10 வருடங்களுக்கு முன்பு செல்ல வேண்டும். எந்தவொரு பெருமை இல்லாமல், திருமணம் நடக்காமல், திறமையை நிரூபிக்க வந்த ஒரு இளம் வீரராக மீண்டும் கோலி மாற வேண்டும். அதற்கு இத்தனை நாட்கள் செய்ததை கோலி முதலில் மறக்க வேண்டும். அந்த பெருமைகளை மறந்தாலே அழுத்தங்கள் சென்றுவிடும்.

என்ன சிக்கல் உள்ளது

என்ன சிக்கல் உள்ளது

விராட் கோலி முதலில் 0 - 10 ரன்கள் வரை அடிப்பதற்குள் தான் சிரமப்படுகிறார், விக்கெட்டை இழக்கிறார். ஆனால் 35 ரன்களுக்கு மேல் சென்றுவிட்டால் அவர் தைரியமாக பெரிய ஷாட்களுக்கு செல்லலாம். எனவே அதற்கு அவர் முதலில் தன்னை ஒரு வாலிபராக நினைத்துக்கொள்ள வேண்டும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022: Michael Vaughan Gives a Important advice to RCB's Virat kohli for his poor batting
Story first published: Friday, May 13, 2022, 19:29 [IST]
Other articles published on May 13, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X