For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது லிஸ்ட்லயே இல்லையே..முதல் விக்கெட்டிற்கு அஸ்வின் களமிறங்கியது ஏன்?? ராஜஸ்தானின் திட்டம் சக்ஸஸ்!!

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி போட்ட திட்டம், பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.

39வது லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் புனே மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங்கை தேர்வு செய்தது.

நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 8வது முறையாக சஞ்சு சாம்சன் டாஸில் தோல்வியடைந்தார்.

ஓப்பனிங் வீரராக விராட் கோலி.. ஆர்சிபி ப்ளேயிங் 11ல் டூப்ளசிஸ் சர்ஃப்ரைஸ்..மாற்றத்திற்கான காரணம் என்ன ஓப்பனிங் வீரராக விராட் கோலி.. ஆர்சிபி ப்ளேயிங் 11ல் டூப்ளசிஸ் சர்ஃப்ரைஸ்..மாற்றத்திற்கான காரணம் என்ன

ராஜஸ்தான் பேட்டிங்

ராஜஸ்தான் பேட்டிங்

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். அவர் ஏற்கனவே ஆர்சிபியில் விளையாடியுள்ளதால், பலவீனத்தை நன்கு அறிந்து வைத்திருந்த முகமது சிராஜ் விக்கெட் எடுத்தார். இதனால் 11 ரன்களுக்கே முதல் விக்கெட் சரிந்தது.

அஸ்வின் பேட்டிங்

அஸ்வின் பேட்டிங்

இந்நிலையில் முதல் விக்கெட்டிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டார். அவர் ஏன் முன்கூட்டியே களமிறங்கினார் என ரசிகர்கள் யோசிப்பதற்குள், ரன்வேகம் பட படவென உயரத்தொடங்கியது. சிராஜ் ஓவரில் அஸ்வின் சந்தித்த முதல் 2 பந்துகளும் அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு பறந்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

ராஜஸ்தான் அணி இந்த முடிவை எடுத்ததற்காக திட்டமும் ஓரளவிற்கு நிறைவேறியது. அதாவது புனே களத்தில் 2வது பேட்டிங் செய்வது சுலபமாக இருக்கும். எனவே அதிக ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்க வேண்டும். அதற்கு சரியான திட்டம் பவர் ப்ளேவில் முடிந்தளவிற்கு ரன்களை குவிப்பது தான். எனவே அஸ்வினை முன்கூட்டியே களமிறக்கி பேட்டை சுழற்ற சொன்னால் ஓரளவிற்கு ரன் ரேட் அதிகரிக்கும். அதன் பிறகு பவுலர்களை கணித்து முன்னணி பேட்ஸ்மேன்கள்

ஸ்கோரை அதிகரிக்கலாம்.

அஸ்வின் ஸ்கோர்

அஸ்வின் ஸ்கோர்

அதன்படியே அஸ்வினும் அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டார். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 9 பந்துகளில் 17 ரன்களை அடித்துவிட்டு அவுட்டானார். இதனால் ராஜஸ்தான் அணி 3 ஓவர்களில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

Story first published: Tuesday, April 26, 2022, 20:54 [IST]
Other articles published on Apr 26, 2022
English summary
IPL 2022: Reason behind Ashwin batting for 1st wicket in RCB vs RR Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X