For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி தரவரிசை.. கோலி அதே முதலிடம்.. ஓய்வு பெற்ற குக் தரவரிசையிலும் சாதனை

துபாய் : ஐசிசி நேற்று வெளியிட்ட தரவரிசை பட்டியலில் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் தன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்.

தன் கடைசி போட்டியில் ஆடி ஓய்வு பெற்ற அலஸ்டர் குக், முதல் பத்து இடங்களுக்குள் வந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இந்திய வீரர்கள் சிலர் கடைசி போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய நிலையில், தரவரிசையில் முன்னேறி உள்ளனர்.

கோலி 1 புள்ளியில்..

கோலி 1 புள்ளியில்..

கோலி 930 புள்ளிகளோடு டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் வெறும் ஒரு புள்ளியில் தன் முதல் இடத்தை ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்து காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார். தடை காலத்தில் இருக்கும் ஸ்மித் 929 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். கோலி ஐந்தாம் போட்டியில் 49 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பண்ட், ராகுல்

ரிஷப் பண்ட், ராகுல்

கடைசி போட்டியில் சதம் அடித்து இங்கிலாந்துக்கு சிறிது நேரம் ஆட்டம் காட்டி வந்த ராகுல் மற்றும் பண்ட் தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர். ராகுல் 16 இடங்கள் முன்னேறி 19வது இடத்தையும், ரிஷப் பண்ட் 63 இடங்கள் முன்னேறி 111வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரிஷப் பண்ட் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார்.

ஜடேஜா முன்னேற்றம்

ஜடேஜா முன்னேற்றம்

ஐந்தாவது போட்டியில் ஜடேஜா பந்துவீச்சை விட பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். முதல் இன்னிங்க்ஸில் 86 ரன்கள் அடித்த அவர், பேட்ஸ்மேன் தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 58வது இடத்தையும், ஆல் ரவுண்டர் பட்டியலில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

அலஸ்டர் குக் அபாரம்

அலஸ்டர் குக் அபாரம்

ஓய்வு பெற்றுவிட்ட குக், தன் கடைசி போட்டியில் அடித்த 71 மற்றும் 147 ரன்கள் காரணமாக 11 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார். இவரை விட அதிக ரன்கள் அடித்தவர்களோடு ஒப்பிட்டால், குக் தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் போது ஓய்வு பெற்றுள்ளார். இவரை விட அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த காலிஸ் 12வது இடம், சச்சின் மற்றும் டிராவிட் 18வது இடம், ரிக்கி பாண்டிங் 26வது இடம் மட்டுமே பெற்று ஓய்வு பெற்றனர்.

Story first published: Thursday, September 13, 2018, 10:10 [IST]
Other articles published on Sep 13, 2018
English summary
Kohli retains No.1 spot in ICC test batsmen ranking, while Cook retires with a top 10 spot
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X