For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 வருஷத்துக்கு நம்மளோட ஆட்டத்த யாரும் நிறுத்த முடியாது -விராட் கோலி

Recommended Video

Kohli, Shami and Shaw making weird gestures in Kohli's post

வெல்லிங்டன் : அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்திய அணிக்காக தான் தீவிரமாக ஆடவுள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அதன்பின்பு அணியின் தலைமையில் எத்தகைய மாற்றங்களும் நிகழக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்காக அடுத்தடுத்த போட்டிகளில் ஓய்வின்றி தான் மட்டுமின்றி அணி வீரர்களும் விளையாடி வருவதாக தெரிவித்துள்ள விராட் கோலி கடந்த 8 ஆண்டுகளாக வருடத்தில் 300 நாட்களுக்கும் மேல் தான் விளையாட்டிற்காக செலவிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு இதே தீவிரத்துடன் தான் ஆடுவேன் என்றும் தன்னுடைய 34 அல்லது 35வது வயதில் தன்னுடைய உடல் தனக்கு ஒத்துழைக்காத நிலை வரும்போது, நிலைமை தலைகீழாகவும் மாற வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

முதலாவது டெஸ்ட் போட்டி

முதலாவது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவுற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. வெல்லிங்டனில் வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணியினர் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

வீரர்களிடம் எதிரொலிப்பு

வீரர்களிடம் எதிரொலிப்பு

இந்நிலையில் தொடர்ச்சியான மற்றும் இடைவெளியில்லாத ஆட்டங்கள் வீரர்களிடம் எதிரொலிப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆயினும் தாங்கள் இந்திய அணிக்காக மிகவும் தீவிரமாக விளையாடி வருவதாகவும் அவர் கூறினார். இந்த இடைவெளி இல்லாத ஆட்டங்கள் வீரர்களிடம் உடலளவில் மற்றும் மனதளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

கேப்டன் விராட் கோலி திட்டவட்டம்

கேப்டன் விராட் கோலி திட்டவட்டம்

இந்நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தான் மிகவும் தீவிரமாகவும் இதே உறுதியுடனும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்றும் அதை எவற்றாலும் தடுக்க முடியாது என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆண்டுதோறும் 300 நாட்களுக்கும் மேல் கிரிக்கெட்டிற்காக விளையாட்டு, பயிற்சி மற்றும் பயணங்களில் தான் செலவழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விராட் கோலி உறுதி

விராட் கோலி உறுதி

தன்னுடைய 34 அல்லது 35வது வயதில், தான் சொல்வதை தன்னுடைய உடல் கேட்காத போது, தான் மாற்றத்திற்கு தயாராவேன் என்றும் ஆனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தன்னுடைய விளையாட்டின் தீவிரம் சற்றும் குறையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுவரை கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் தான் தொடர்ச்சியாக விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிகமான பங்களிப்பு தேவை

அதிகமான பங்களிப்பு தேவை

கேப்டனாக செயல்படுவது எளிதான செயல் அல்ல என்று தெரிவித்துள்ள கோலி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அணியில் தன்னுடைய பங்களிப்பு அதிகமாக தேவை என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும், ஆனால் கடந்த 5 -6 ஆண்டுகளுக்கு முன்பு அணியின் தலைமையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தை போல அடுத்த 3 ஆண்டுகளில் மாற்றம் நிகழலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 19, 2020, 18:51 [IST]
Other articles published on Feb 19, 2020
English summary
Virat said he can go on with the same intensity for next 3 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X