புத்தாண்டில் புதிய சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - முகமது ஷமி

அம்ரோஹா : புத்தாண்டில் புதிய சவால்களை எதிர்கொள்ள காத்திருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். தான் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் தொடர்ந்து பல்வேறு

தொடர்களில் பங்கேற்ற முகமது ஷமிக்கு இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வரும் 14ம் தேதி மும்பையில் துவங்கவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி பங்கேற்கவுள்ளார். இதற்கென தீவிர பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருபவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார் போன்ற பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த நிலையில், அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் ஷமி.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருபவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார் போன்ற பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த நிலையில், அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் ஷமி.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதலிடம்

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதலிடம்

கடந்த ஆண்டில் 20 போட்டிகளில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதலிடத்தை முகமது ஷமி பெற்றுள்ளார்.

முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பெருமிதம்

முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பெருமிதம்

முகமது ஷமியின் பந்துவீச்சு குறித்து பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், மைதானத்தில் ஷமி பந்து வீசும்போது, வேட்டைக்கு செல்லும் சிறுத்தையின் வேகம் நியாபகத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளார்

ஷமி குறித்து கவாஸ்கர் பேச்சு

ஷமி குறித்து கவாஸ்கர் பேச்சு

மேலும் தான் சோர்வுறும் போதெல்லாம் தன்னை அதிலிருந்து மீட்கும் மறைந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷலை முகமது ஷமி நினைவுப் படுத்துவதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

"சவால்களுக்காக காத்திருக்கிறேன்"

இதனிடையே, இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள முகமது ஷமி, தான் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படத்தை தனது டிவிட்டரில் பகிர்ந்து, புத்தாண்டில் புதிய சவால்களுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Indian fast bowler Mohammed Shami Gearing up for Challenges
Story first published: Tuesday, January 7, 2020, 10:39 [IST]
Other articles published on Jan 7, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X