For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த பந்து பேடில் பட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?..அஸ்வின் தடாலடி பதில்.. ரசிகர்கள் அதிர்ச்சி

மெல்போர்ன்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியில், தன்னுடைய ஓய்வு அறிவிப்பும் இருந்திருக்கும் என அஸ்வின் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 பிரிவில் இதுவரை 14 போட்டிகள் நடந்துவிட்ட போதும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் தாக்கம் குறையவே இல்லை.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும், விராட் கோலி ஒற்றை ஆளாக களத்தில் போராடி வெற்றியை பெற்று தந்தார்.

என்னா மேட்ச்..! பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி.. ஜிம்பாப்வே அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்ததுஎன்னா மேட்ச்..! பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி.. ஜிம்பாப்வே அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது

பாகிஸ்தான் ஆட்டம்

பாகிஸ்தான் ஆட்டம்

ஒருபுறம் கோலியின் அரைசதம் உதவினாலும், மற்றொரு புறம் அஸ்வினின் புத்திசாலி தனமும் ஆட்டத்தையே புரட்டிப்போட்டது. ஆட்டத்தின் கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற போது முகமது நவாஸ் எப்படியும் லெக் சைடில் வீசுவார் என கணித்த அஸ்வின்,புத்திசாலிதனமாக நகர்ந்து சென்று வைட் வாங்கினார். இதனால் ஆட்டமும் டிராவானது. அதன் பின்னர் தான் கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க அஸ்வினுக்கு சுலபமானது.

த்ரில் ஆட்டம்

த்ரில் ஆட்டம்

பதற்றமான அந்த சூழலில் அஸ்வினின் அந்த புத்திசாலிதனம் தான் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. இதனையடுத்து அவருக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வந்தன. அஸ்வின் இப்படி ஒரு விஷயத்தை செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை என விராட் கோலியே ஆச்சரியப்பட்டு பேசினார். இந்நிலையில் அதுகுறித்து சுவாரஸ்ய விஷயத்தை அஸ்வின் கூறியுள்ளார்.

அஸ்வினின் பேச்சு

அஸ்வினின் பேச்சு

பிசிசிஐ நேர்க்காணலில் பேசிய அவர், "முகமது நவாஸ் வீசிய அந்த ஒரு பந்து டேர்ன் ஆகாமல் பேடில் பட்டு எல்.பி.டபள்யூ ஆகியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என ஒரு ரசிகர் என்னிடம் கேட்டார். அதற்கு என்னுடைய பதில் ஓய்வு அறிவிப்பு தான். நேராக ஓய்வு அறைக்கு சென்றிருப்பேன். உடனடியாக செல்போனை எடுத்து இத்தனை ஆண்டுகள் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி, சிறப்பான கிரிக்கெட் பயணம் என ட்வீட் போட்டு ஓய்வு பெற்றிருப்பேன்" என அஸ்வின் கூறினார்.

அஸ்வின் மீதான நம்பிக்கை

அஸ்வின் மீதான நம்பிக்கை

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டி20 கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ச்சியாக வாய்ப்ப்பு கிடைக்காமலேயே இருந்து வருகிறது. இந்தாண்டு தான் அவர் மீது முழு நம்பிக்கை வைத்து டிராவிட் வாய்ப்பு தந்துள்ளார். கடந்த நெதர்லாந்து போட்டியிலும் அதனை அஸ்வின் 2 விக்கெட்களை கைப்பற்றி சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 28, 2022, 18:56 [IST]
Other articles published on Oct 28, 2022
English summary
Ravichandran Ashwin Answer for what if Nawaz Ball Had Turned in India vs pakistan match of t20 world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X