For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மதம் பற்றி பேசிய பாக். வீரர்...!! கரண்டியால் குத்த முயன்ற இந்திய வீரர்...!! என்ன நடந்தது?

மான்செஸ்டர்:கரண்டியால் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப்பை குத்தியதாக கடந்த கால நினைவுகளை கூறியிருக்கிறார் ஹர்பஜன் சிங்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேரம் நெருங்க... நெருங்க... ரசிகர்களின் டென்ஷன் எகிறிக் கொண்டே செல்கிறது. உலகக்கோப்பை அரங்கில் இந்திய அணி 6-0 என ஆதிக்கம் செலுத்தி வருகிறது.பாகிஸ்தான், இந்தியா போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். போட்டி நடக்கும் இடம் மான்செஸ்ட்ர்.

ரசிகர்களின் டென்ஷன் ஒரு பக்கம் இருக்க... மழையும் ஏகத்துக்கும் பயமுறுத்தி கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால், போட்டியின் போது மழை குறுக்கீடு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

செம, மாஸ்.. அபிநந்தனையா கிண்டல் பண்றீங்க.. பாக். மீடியாவுக்கு 'நச்' பதிலடி கொடுக்கும் இந்திய வீடியோ செம, மாஸ்.. அபிநந்தனையா கிண்டல் பண்றீங்க.. பாக். மீடியாவுக்கு 'நச்' பதிலடி கொடுக்கும் இந்திய வீடியோ

2003ல் நடந்த சம்பவம்

2003ல் நடந்த சம்பவம்

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் 2003ம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை நினைவு கூர்ந்து ரசிகர்களை மேலும் பரபரப்புக்கு கொண்டு போயிருக்கிறார் ஹர்பஜன் சிங். அவரும் பாகிஸ்தானின் முகமது யூசுப் ஆகியோர் முள்கரண்டியை வைத்து சண்டையிட்ட சம்பவம் தற்போது வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

விளையாட்டு வினையானது

விளையாட்டு வினையானது

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியிருப்பதாவது:உலக கோப்பை தொடரின் போது, விளையாட்டாக ஆரம்பித்த சம்பவம் வினையாக முடிய இருந்தது. அதாவது, 2003ம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நான் விளையாடும் லெவனில் இல்லை. கும்ளே தான் அப்போது அணியில் இடம் பெற்றிருந்தார்.

பஞ்சாபி பேசுவோம்

பஞ்சாபி பேசுவோம்

உணவு இடைவேளையின் போது நான் டேபிளில் அமர்ந்திருந்தேன். அப்போது யூசுப்பும், அக்தரும் அதே இடத்தில் அமர்ந்திருந்தனர். நானும், யூசுப்பும் பஞ்சாபி பேசுவோம். திடீரென இருவரும் காலை பிடித்து இழுத்துக்கொண்டோம்.

மதம் பற்றி பேச்சு

மதம் பற்றி பேச்சு

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. யூசுப் எனது சொந்த விஷயம் குறித்தும், எனது மதம் குறித்தும் பேசினார். அதற்கு அவரது மூக்குடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்தேன்.

தாக்க தயாரானேன்

தாக்க தயாரானேன்

ஆத்திரம் பொங்கியது. ஒரு கட்டத்தில் இருவரும் டேபிளில் இருந்த முள் கரண்டியை எடுத்து கொண்டு தாக்க இருவரும் தயாரானோம். சண்டை பெரிதாகும் முன் என்னை டிராவிட், ஸ்ரீநாத் ஆகியோர் இழுத்து சென்றனர்.

16 ஆண்டுகள் ஆனது

16 ஆண்டுகள் ஆனது

வாசிம், சயீத் அன்வர் யூசுப்பை அழைத்து சென்றனர். அப்போது ஆக்ரோஷமான சண்டையாக இருந்தது. தற்போது 16 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது யூசுப்பை பார்த்தால் அந்த சம்பவம் நினைவுக்கு வரும். இருவரும் சிரித்து கொள்வோம் என்றார்.

Story first published: Saturday, June 15, 2019, 17:33 [IST]
Other articles published on Jun 15, 2019
English summary
Ready to attack Mohammed Yousuf in 2003 world cup series, says Harbhajan Singh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X