For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாணயமானவர்னு நினைச்சேன்.. கீழ்த்தரமா நடந்துகிட்டார்.... அஸ்வினை கழுவி ஊத்திய ஷேன் வார்னே!!

Recommended Video

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரின் முதல் பெரும் சர்ச்சையை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்துள்ளார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடியாக ஆடி வந்த பட்லரை பந்து வீசி ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல், மன்கட் முறையில், எதிர்முனையில் பட்லர் கிரீஸை விட்டு வெளியேறிய போது, பந்துவீசாமல் அவரை ரன் அவுட் செய்தார் அஸ்வின்.

அஸ்வின்.. என்ன செஞ்சு வச்சுருக்கீங்க.. தவறான பாதையை காட்டிட்டீங்களே!! பொங்கிய இங்கிலாந்து வீரர்கள்! அஸ்வின்.. என்ன செஞ்சு வச்சுருக்கீங்க.. தவறான பாதையை காட்டிட்டீங்களே!! பொங்கிய இங்கிலாந்து வீரர்கள்!

தர்மத்திற்கு எதிரானது

தர்மத்திற்கு எதிரானது

கிரிக்கெட்டில் இது போல நடந்தால் முதல் முறை எச்சரிக்கை கொடுத்து பின்னர், இரண்டாவது முறையும் கிரீஸை விட்டு வெளியேறினால்தான் ரன் அவுட் செய்வார்கள். ஆனால், அஸ்வின் எச்சரிக்காமல் ரன் அவுட் செய்தது கிரிக்கெட் விதிக்கு உட்பட்டு இருந்தாலும், தர்மத்திற்கு எதிரானது என பலரும் கூறி வருகின்றனர்.

காய்ச்சிய வார்னே

காய்ச்சிய வார்னே

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளம்பரத் தூதராக இருக்கும் ஷேன் வார்னே அஸ்வினின் இந்த செயலை காய்ச்சி, ட்விட்டரில் தொடர் பதிவுகளை போட்டுத் தள்ளினார். அவற்றின் சுருக்கம் இங்கே -

பந்து வீசும் எண்ணம் இல்லை

"எல்லா கேப்டன்களும் "ஸ்பிரிட் ஆஃப் தி கேம்" என்பது குறித்து ஐபிஎல் தொடங்கும் முன் ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுகிறார்கள். ஆனால், இங்கே அஸ்வினுக்கு பந்து வீசும் எண்ணம் இல்லை (அஸ்வின் வேண்டுமென்றே தாமதப்படுத்தி, பட்லரை ரன் அவுட் செய்துள்ளார் என்கிறார்). எனவே, இதை டெட் பால் என அறிவிக்க வேண்டும். பிசிசிஐ - இது ஐபிஎல்-க்கு நல்லதல்ல"

மன்னிப்பு கோரினால்..

"ஒரு கேப்டனாக இருந்து கொண்டு இவ்வளவு கீழ்த்தரமான செயலை ஏன் செய்தீர்கள்? இதற்கு நீங்கள் மன்னிப்பு கோரினால் அது மிகவும் தாமதம். இந்த கீழ்த்தரமான செயலுக்காக நீங்கள் நினைவில் இருப்பீர்கள்"

மனநிலை

"என்ன செய்தாலும் பரவாயில்லை வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை மாற வேண்டும். நாம் கிரிக்கெட் ஆடும் இளம் சிறுவர், சிறுமியருக்கு உதாரணமாக இருக்க வேண்டும்"

கேவலமான செயல்

"இது விதிக்கு உட்பட்டது எனக் கூறும் முன்னாள் வீரர்களை கேட்கிறேன். நீங்கள் ஏன் இதை செய்யவில்லை? ஏனென்றால், இது கேவலமான, அவமானகரமான செயல். மேலும், விளையாட்டு தர்மத்துக்கு எதிரானது"

கோலிக்கு செய்தால்..

"அஸ்வின் இன்று செய்ததை, பென் ஸ்டோக்ஸ், விராட் கோலிக்கு செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா? அஸ்வின் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். அவர் நாணயமானவர், மதிப்பானவர் என நினைத்தேன். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்று ஏராளமான ரசிகர்களை இழந்துவிட்டது. குறிப்பாக இளம் சிறுவர் - சிறுமியரை.. பிசிசிஐ ஏதாவது செய்யுங்கள்"

Story first published: Tuesday, March 26, 2019, 14:17 [IST]
Other articles published on Mar 26, 2019
English summary
RRvKXIP IPL 2019 : Shane Wanre says Ashwin’s act is embarrassing and disgraceful
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X