For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா”.. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!

ராஞ்சி: 2021ல் விராட் கோலி ஃபார்ம் அவுட்டால் தவித்து வந்த போது முக்கிய அட்வைஸை கொடுத்ததை போலவே தற்போது டெஸ்ட் கிரிகெட்டிற்காகவும் முக்கிய ஆலோசனையை கூறியுள்ளார் சவுரவ் கங்குலி.

நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது.

இந்த தொடர் முடிந்தவுடன் தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்திரேலியாவுடனான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி கண்டால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும்.

விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பாபர் அசாம்.. தோனி, கோலி லிஸ்ட்டில் பாபர்.. ஐசிசியின் கவுரவம் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பாபர் அசாம்.. தோனி, கோலி லிஸ்ட்டில் பாபர்.. ஐசிசியின் கவுரவம்

கங்குலி வார்த்தைகள்

கங்குலி வார்த்தைகள்

2022ம் ஆண்டு முதல் பாதியில் விராட் கோலி ஃபார்ம் அவுட்டாகியிருந்த சூழலில் சவுரவ் கங்குலி கூறிய வார்த்தைகள் பெரும் மற்றத்தை கொடுத்தன. அதாவது, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் ஓய்வு பெற்றுள்ள கோலி, நிச்சயம் ஆசிய கோப்பையில் ரன் அடிப்பார், அதில் இருந்து சிறப்பான சீசன் அவருக்கு இருக்கும் எனக்கூறினார்.

கோலியின் கம்பேக்

கோலியின் கம்பேக்

கங்குலி கூறியதை போலவே ஆசிய கோப்பையில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். 2023ம் ஆண்டும் கோலி நினைத்ததை விட சிறப்பாக தொடங்கியுள்ளது. இலங்கையுடனான ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதத்தை பூர்த்தி செய்துவிட்டார். அடுத்ததாக அவருக்கு உள்ள சவால் டெஸ்ட் கிரிக்கெட் தான். கடைசி 6 மாதங்களில் 2 டெஸ்ட்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.

 புது அட்வைஸ்

புது அட்வைஸ்

இந்நிலையில் கோலிக்கு மீண்டும் ஒரு அட்வைஸை கொடுத்துள்ளார் கங்குலி. அதில், இலங்கை, வங்கதேசத்திற்கு எதிராக கோலி மிகச்சிறப்பாக விளையாடியுள்ளார். அஸ்திரேலியாவுக்கு எதிராக மிக முக்கியமான தொடர் வரவுள்ளது. இதில் விராட் கோலியை தான் இந்தியா மிகவும் நம்பியுள்ளது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி தனது செயல்பாட்டை முன்னேற்ற வேண்டும்.

இறுதிப்போட்டியின் கணிப்பு

இறுதிப்போட்டியின் கணிப்பு

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். ஏனென்றால் இரு அணிகளுமே சிறப்பான ஃபார்மில் உள்ளனர். இந்த அணிகள் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதும் என நினைக்கிறேன். இதற்கு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் தர வேண்டும் என சவுரவ் கங்குலி பேசியுளார்.

Story first published: Friday, January 27, 2023, 12:09 [IST]
Other articles published on Jan 27, 2023
English summary
Former Indian cricketer Sourav ganguly gives a key advice to virat kohli ahead of India vs australia Border gavaskar test series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X