For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மரண அடி.. இந்த 4 ஓவரை வாழ்க்கையில் மறக்கவே முடியாது.. இலங்கை வீரருக்கு சேர்ந்த கதி.. ஆஸி வெறித்தனம்!

அடிலெய்டு : இலங்கை பந்துவீச்சாளர் ரஜிதாவின் ஓவர்களில் சரவெடி கொளுத்தி வேடிக்கை பார்த்தனர் மூன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி முதல் டி20 போட்டியில் ஆடியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடியது.

மோசமான உலக சாதனை

மோசமான உலக சாதனை

அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 20 ஓவர்களில் 233 ரன்கள் குவித்து தெறிக்கவிட்டனர். அதில் தான் ரஜிதா வசமாக சிக்கி மோசமான உலக சாதனை ஒன்றை செய்துள்ளார்.

முதல் டி20

முதல் டி20

இலங்கை அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்று முதலில் டி20 தொடரில் பங்கேற்றது. முதல் டி20 போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி லசித் மலிங்கா தலைமையில் களமிறங்கியது.

வார்னர், ஸ்மித்

வார்னர், ஸ்மித்

கடந்த ஆண்டு பந்து சேத விவகாரத்தால் தடையில் இருந்த டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், தடைக்குப் பின் முதன்முறையாக ஆஸ்திரேலிய டி20 அணியில் இடம் பிடித்ததால், அவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

பெரிய தவறு

பெரிய தவறு

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்து பெரிய தவறு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் அதிரடி துவக்கம் அளித்தனர்.

ஆஸ்திரேலியா அதிரடி

ஆஸ்திரேலியா அதிரடி

ஆரோன் பின்ச் 36 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு பின்ச் - வார்னர் ஜோடி 10.5 ஓவர்களில் 122 ரன்கள் சேர்த்து இருந்தது. அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் அதிரடி ஆட்டம் ஆட இலங்கை நிலை குலைந்தது.

சிக்ஸ் மழை

சிக்ஸ் மழை

மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். வார்னர் 56 பந்துகளில் 100 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்ச் 3 சிக்ஸ், வார்னர் 4 சிக்ஸ், மேக்ஸ்வெல் 3 சிக்ஸ் அடித்தனர்.

ரஜிதா பரிதாபம்

ரஜிதா பரிதாபம்

இவர்கள் மூவரின் அதிரடியில் அனைத்து இலங்கை பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை வாரி இறைத்தாலும், வேகப் பந்துவீச்சாளர் ரஜிதா 4 ஓவர்களில் 75 ரன்கள் கொடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் மோசமான சாதனையை பதிவு செய்தார்.

மரண அடி

மரண அடி

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற சோதனையான சாதனையை பதிவு செய்தார் ரஜிதா. இவர் பந்துவீச்சில் மட்டும் 7 ஃபோர், 6 சிக்ஸ் அடிக்கப்பட்டது. அவர் வாழ்நாளில் இந்த 4 ஓவர்களை மட்டும் மறக்கவே முடியாது என கூறும் அளவுக்கு மரண அடி அடித்துள்ளனர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்.

நுவான் பிரதீப் சிக்கனம்

நுவான் பிரதீப் சிக்கனம்

டி சில்வா 3 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து ரஜிதாவுக்கு அடுத்ததாக அதிக ரன்களை கொடுத்திருந்தார். நுவான் பிரதீப் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து சிக்கனமாக பந்து வீசினார்.

இலங்கை படுதோல்வி

இலங்கை படுதோல்வி

அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமான டி20 தோல்வியை சந்தித்தது. இலங்கை அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட 17 ரன்னை தாண்டவில்லை.

Story first published: Sunday, October 27, 2019, 17:14 [IST]
Other articles published on Oct 27, 2019
English summary
Srilankan bowler Rajitha cannot forget this 4 overs, as Australian batsmen blasted his balls to boundaries.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X