For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH vs RCB: ருத்ரதாண்டவமாடி 231 ரன்களை குவித்த ஹைதராபாத்.. 113 ரன்னில் சரண்டரான பெங்களூர்

Recommended Video

IPL 2019:Hyderabad vs Bengaluru | ஹைதராபாத் அபார பேட்டிங், பெங்களூருக்கு அடுத்த தோல்வி

ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் அணி நிர்ணயித்த 232 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி முடியாமல் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது.

ஹைதராபாதில் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடர் லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

தொடக்க வீரர்களாக பெய்ர்ஸ்டோவும், வார்னரும் களம் இறங்கினர். இருவரும் மிக நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல இருவரும் ரன் விகிதத்தை உயர்த்த தொடங்கினர்.

பலனளிக்கவில்லை

பலனளிக்கவில்லை

கிடைக்கும் பந்துகளை அவர்கள் இருவரும் பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த ஜோடியை பிரிக்க கோலி எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். எதற்கும் பலன் இல்லை.

ரன்கள் வந்தன

ரன்கள் வந்தன

ரன்கள் வந்து கொண்டே இருந்தன. பந்துகள் பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் பறந்து கொண்டே இருந்தன. அருமையான ஆட்டத்தை ஆடிய பெய்ர்ஸ்டோவ் அரைசதம் கடந்தார்.

ருத்ரதாண்டவம்

ருத்ரதாண்டவம்

அதன்பிறகு தான் தமது ருத்ரதாண்டவத்தை அவர் தொடங்கினார். மளமளவென ரன்களை குவித்த அவர் இந்த ஐபிஎல் தொடரில் தமது முதல் சதத்தை எட்டினார். 114 ரன்களில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

அவர் வெளியேறிய அதே வேளையில் பெங்களூர் அணியின் பந்துகளை அடி, வெளுக்க ஆரம்பித்தார். சதம் அடித்துவிட்டு செல்வேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அவர் ஆடியது நன்றாகவே தெரிந்தது.

பெய்ர்ஸ்டோவ் சதம்

பெய்ர்ஸ்டோவ் சதம்

கிடைக்கிற பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் அனுப்பி வைத்தார். சதத்தையும் எட்டி சாதனை படைத்தார். 54 பந்துகளில் அவர் சதம் அடித்தார்.

வார்னர் சதம்

வார்னர் சதம்

இதன்மூலம், இன்றைய சதத்தின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் தனது 4வது சதத்தை வார்னர் பதிவு செய்தார். மேலும் ஐபிஎல் அரங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் வீரர்கள் பட்டியலில் டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி சேன் வாட்சன் மற்றும் விராட் கோஹ்லியுடன் இணைந்து இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார்.

232 ரன்கள் இலக்கு

232 ரன்கள் இலக்கு

20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை எடுத்தது. பிரம்மாண்டமான இந்த ஸ்கோரை எடுக்க பெய்ர்ஸ்டோவும், வார்னரும் காரணமாக அமைந்தனர்.

தொடங்கியது வீழ்ச்சி

தொடங்கியது வீழ்ச்சி

அதன் பின்னர் பெங்களூர் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பார்த்தீவ் படேல் 11 ரன்களில் வெளியேறினார். அணியின் ஸ்கோர் 20 ரன்களாக இருந்த போது ஹெட்மெயர் அவுட்டானார்.

கோலி அவுட்

கோலி அவுட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அதன் பிறகு ரன்களை விட விக்கெட்டுகள் தான் விழுந்தன.

பெங்களூர் படுதோல்வி

பெங்களூர் படுதோல்வி

ஒரு கட்டத்தில் அந்த அணி 19 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, கிராண்ட் ஹோம் 37 ரன்கள் எடுத்தார்.

Story first published: Sunday, March 31, 2019, 19:52 [IST]
Other articles published on Mar 31, 2019
English summary
Royal challengers Bangalore bating failed against sun risers hydrabad in ipl.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X