For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு ஓவர்ல 6 முறை “டைவ்” அடிக்கணும்னாலும் ரெடி.. டீம் தான் எனக்கு முக்கியம் - கோலி

Recommended Video

10000 ரன்களை கடந்த கோஹ்லி என்ன சொல்கிறார் தெரியுமா?- வீடியோ

மும்பை : இந்திய அணியின் கேப்டன் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10,0௦௦ ரன்களை கடந்தார்.

சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார்.

அணிக்காக விளையாடுவது தான் முக்கியம் என குறிப்பிட்டார். அணிக்காக மட்டுமே கூடுதல் ரன்களை எடுக்கிறேன் எனவும் கூறினார்.

பத்து வருடங்கள் கடந்து..

பத்து வருடங்கள் கடந்து..

பத்தாயிரம் ரன்கள் அடித்தது பற்றி கேட்டதற்கு, "நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இந்த விஷயங்கள் எனக்கு முக்கியமில்லை. ஆனால், என் கிரிக்கெட் வாழ்வில் இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன் என புரிந்து கொள்ள உதவுகிறது. பத்து வருடங்கள் என்பது சிறப்பானது. நான் இந்த விளையாட்டை மிகவும் விரும்புகிறேன். இன்னும் அதிகம் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்" என கூறினார்.

எனக்கு அணி தான் முக்கியம்

எனக்கு அணி தான் முக்கியம்

"நான் சோர்வாக, மனதளவில் தயாராக இல்லாதது ஆகியவற்றை விட ஒரு ரன் கூடுதலாக அடிக்க வேண்டும் என்பதே முக்கியம். அணிக்கு என்ன தேவையோ அதை செய்வது தான் எனது நோக்கம்" எனவும் கூறினார் கோலி.

6 முறை டைவ் அடிக்க ரெடி

6 முறை டைவ் அடிக்க ரெடி

மேலும், "அணிக்காக ஒரு ஓவரில் 6 முறை டைவ் அடிக்க வேண்டும் என்றால் நான் நிச்சயம் செய்வேன். ஏன்என்றால் அது தான் என் கடமை. அதற்கு தான் நான் நாட்டுக்காக ஆட தேர்வு செய்யப்பட்டுள்ளேன்" எனவும் கூறினார் கோலி.

கோலியின் முன்னேற்றம்

கோலியின் முன்னேற்றம்

விராட் கோலி இந்திய அணியில் இணைந்து கிரிக்கெட் ஆட துவங்கிய போது இருந்ததை விட உடலளவில் தற்போது பல மடங்கு முன்னேறி இருக்கிறார். அதே போல அவரது ரன் குவிக்கும் திறனும் முன்பை விட இப்போது மேம்பட்டு இருக்கிறது.

Story first published: Friday, October 26, 2018, 12:00 [IST]
Other articles published on Oct 26, 2018
English summary
Virat Kohli says he is ready to dive six times in an over if the team needs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X