சார் பணத்தை கொடுங்க! பிசிசிஐயிடம் மல்லுகட்டும் யுவராஜ்சிங்

Posted By: Staff

டெல்லி: இந்தியாவுக்கு 2011ல் உலகக் கோப்பை கிடைப்பதற்கு முக்கிய பங்கு வகித்த அதிரடி நாயகன் யுவராஜ் சிங், தனக்கு பிசிசிஐ தர வேண்டிய, ரூ.3 கோடியை கேட்டு நடையாய் நடந்து வருகிறார்.

பிசிசிஐ விதிகளின்படி, இந்தியாவுக்காக விளையாடும்போது காயமேற்படும் வீரர்கள், ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாவிட்டால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

Yuvraj’s battle with BCCI

2016ல் இந்தியாவுக்காக டி-20 போட்டிகளில் விளையாடபோது யுவராஜ் சிங் காயமடைந்தார். அதனால் அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாட முடியவில்லை.

இதற்கான இழப்பீடாக ரூ.3 கோடி கேட்டு, ஒன்றரை வருடங்களாக பிசிசிஐக்கு நடையாய் நடந்துள்ளார் யுவராஜ் சிங். அதே நேரத்தில், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டோர் இந்த இழப்பீட்டை வாங்கிவிட்டனர்.

2019 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க போராடும் யுவராஜ் சிங், தனக்கு வரவேண்டிய பணத்துக்காக பிசிசிஐக்கு நடையாய் நடந்து வருகிறார். ஒருவேளை, இது அவருக்கு பிசிசிஐ அளிக்கும் பயிற்சியாக இருக்குமா?

Story first published: Thursday, October 12, 2017, 10:26 [IST]
Other articles published on Oct 12, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற