For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய வாண்டர்லீ டி லீமாவின் சோக கதை தெரியுமா?

By Mayura Akilan

ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் போட்டியில், கால்பந்து ஜாம்பாவன் பீலேதான் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் விழாவைத் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் பீலேவால் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலையில் ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் மாரத்தான் வீரர் வாண்டர்லீ கார்டிரோ டி லீமா ஏற்றி வைத்தார்.

கடைசி நேரத்தில் பீலே உடல் நலக் கோளாறு காரணமாக ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதால், அவருக்கு பதிலாக டி லீமாவுக்கு இந்த வாய்ப்பு வாங்கப்பட்டது.

யார் இந்த டி லீமா என்ற கேள்வி இன்றைய தலைமுறையினருக்கு எழலாம். ஏனெனில் விளையாட்டு உலகில் கால்பந்து ஜாம்பவான் பீலே போல டி லீமா அறியப்பட்டவர் இல்லை. ஆனால் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி லீமா , சந்தித்த சில நொடி சிக்கல் மட்டும் வெகு பிரபலம். அந்த அரை நிமிட சிக்கலில் தனது தங்கப்பதக்கத்தை தவறவிட்டவர் டி லீமா.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்

ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தானில் தங்க பதக்கத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார் டி லீமா. முதல் 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்தான் முதலிடத்தில் இருந்தார். தங்கம் அவருக்குத்தான் என்று மைதானத்தில் இருந்தவர் எதிர்பார்த்தனர்.

தரையில் விழுந்த டி லாமா

தரையில் விழுந்த டி லாமா

திடீரென மது போதையில் இருந்த பார்வையாளர் ஒருவர், டி லீமாவின் குறுக்கே புகுந்து தடுத்து அவரை தரையில் தள்ளினார். இதனால் டி லீமாவினால் தொடர்ந்து 30 விநாடிகள் வரை ஓட முடியாத நிலை ஏற்டுகிறது. இதனால் டி லீமாவின் தங்கக் கனவு பறி போனது.

ஒலிம்பிக் கவுரவம்

ஒலிம்பிக் கவுரவம்

முதலிடத்தை பிடித்த இத்தாலி வீரர் 2 : 10: 55 விநாடிகளிலும் 2வது இடத்தை பிடித்த அமெரிக்க வீரர் 2:11:29 விநாடிகளிலும் இலக்கை கடந்தனர்.

மறுபடியும் இந்த போட்டி நடத்த வேண்டுமென பிரேசில் கோரிக்கை விடுத்தது. ஆனால் பயன் இல்லை. எனினும் ஸ்பிரிட் ஆப் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் விருதை வழங்கி அப்போது டி லீமாவை கௌரவித்தது ஒலிம்பிக் கவுன்சில்.

3 வது இடம்

3 வது இடம்

மது அருந்திய ஒருவரால், டி லீமாவின் ஒலிம்பிக் தங்கப்பதக்க கனவு தகர்ந்து போனது. டி லீமா 2 மணிநேரம் 12 நிமிடம் 11 விநாடிகளில் இலக்கினை கடந்த அவரால், வெண்கலப் பதக்கத்தை வென்றார். அப்போது உலகமே டி லீமாவுக்காக பரிதாபப்பட்டது. அந்த மனக் காயத்தை ஆற்றும் வகையில்தான், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைக்கும் பெருமை தற்போது டி லீமாவிற்கு கிடைத்துள்ளது

Story first published: Saturday, August 6, 2016, 15:22 [IST]
Other articles published on Aug 6, 2016
English summary
In the lead up to the 2016 Rio Olympics, many people believed Brazilian soccer legend Pelé would light the Olympic cauldron to officially kick off the competition at the opening ceremonies. Olympic marathoner Vanderlei Cordeiro de Lima.By all accounts, de Lima was a deserving choice. In 2004 Olympics in Athens, when he delivered an incredible and surprising performance despite the actions of a drunken spectator.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X