For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக்: தீபத்தை ஏற்றினார் பிரேசில் மாரத்தான் வீரர் வாண்டர்லீ டி லீமா

By Mayura Akilan

ரியோ: ரியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா நடைபெறும் மரக்கானா மைதானத்தில் ரியோ ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. மாரத்தான் வீரர் வாண்டர்லீ டி லீமா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினர். முன்னதாக பாரம்பரிய முறைப்படி ரியோ ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் 31வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது. 207 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவையொட்டி மரக்கானா மைதானத்தில் பிரேசில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமான கிரீஸ் நாட்டில் இருந்து, ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, பிரேசில் கொண்டுவரப்பட்டது. அதன்பின், பல்வேறு விளையாட்டு வீரர்களால், தொடர் ஓட்டம் மூலமாக பிரேசில் முழுவதும் ஒலிம்பிக் சுடர், சுற்றி எடுத்துவரப்பட்டு, இறுதியாக, நேற்று மைதானத்திற்கு வந்துசேர்ந்தது.

வீரர்கள் அணிவகுப்பு

வீரர்கள் அணிவகுப்பு

அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது ஆப்கன் வீரர், வீராங்கனைகள் தேசியக் கொடியை ஏந்திய வண்ணம் வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் அபினவ் பிந்த்ரா தலைமையில் அணிவகுத்து சென்றனர். 118 இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். பின்னர் மரக்கானா மைதானத்தில் ரியோ ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

ஒலிம்பிக் தீபம்

ஒலிம்பிக் தீபம்

தொடர் ஓட்டம் மூலமாக, ரியோ டி ஜெனிரோ கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாரத்தான் வீரர் வாண்டர்லீ டி லீமா ஏற்றிவைத்தார். இவர் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அணையாத தீபம்

அணையாத தீபம்

தீபம் ஏற்றப்பட்டதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகள் முறைப்படி, தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. போட்டி முடியும் 21ம் தேதி வரை, ஒலிம்பிக் தீபம் தொடர்ந்து எரிந்தபடி இருக்கும். இன்று தொடங்கி, வரும் 21ம் தேதி வரை பல்வேறு பிரிவுகளின்கீழ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

பீலே பங்கேற்கவில்லை

பீலே பங்கேற்கவில்லை

பிரேசில் நாட்டு முன்னாள் நட்சத்திர கால்பந்து ஜாம்பவான் பீலே ,75 உடல்நலக்குறைவால் ரியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஒலிம்பிக் ஜோதியை பீலே ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் அவரால் தொடக்க விழாவில் பங்கேற்கமுடியவில்லை. இது அவரது ரசிகர்களிடையே கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, August 6, 2016, 13:53 [IST]
Other articles published on Aug 6, 2016
English summary
Brazilian marathoner Vanderlei De Lima has lit the cauldron at the Rio Games.
 
 De Lima was one of the suspected candidates after Pele revealed earlier Friday that health problems would keep him from attending the opening ceremony at Maracana Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X