For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒன்றல்ல… ரெண்டல்ல.. !! 11 தொடர் தோல்வி..!! கடைசியாக மீண்டெழுந்த பாகிஸ்தான்..!! ரசிகர்கள் குஷி

நாட்டிங்ஹாம்: 11 தொடர் தோல்விகளுக்கு பிறகு முதல் முறையாக வெற்றி பெற்று சரிவில் இருந்து மீண்டு இருக்கிறது பாகிஸ்தான். அதனால், அந்நாட்டு ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர்.

உலக கோப்பையில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் மோதிய நேற்றைய போட்டி தான் கிரிக்கெட் ரசிகர்களின் தற்போதைய டாக். காரணம் தொடந்து வெற்றி பயணத்தில் சென்று கொண்டிருக்கும் இங்கிலாந்து, தோல்விதான்... தோல்வியை தவிர ஒன்று மில்லை என்று ஓடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானும் சந்தித்த போட்டி.

பவுலிங் மோசம்

பவுலிங் மோசம்

போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து சேசிங்கை தேர்வு செய்தது. ஏன் எனில் 2வது பேட்டிங் செய்து அதில் இங்கிலாந்து அணி வைத்திருந்த ரெக்கார்டு அப்படி. ஆனால், வழக்கமாக இல்லாமல் பந்துவீச்சில் கோட்டை விட்டது இங்கிலாந்து. பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஆர்ச்சர் விட்டுக் கொடுத்து கொஞ்ச நஞ்சமல்ல 79 ரன்கள்.

348 ரன்கள் எடுத்தது

348 ரன்கள் எடுத்தது

ஒரு வழியாக, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹபீஸ் 84 ரன்களும், பாபர் ஆசம் 63 ரன்களும் எடுத்தனர். 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியின், ஜோ ரூட் 107 ரன்களும், ஜாஸ் பட்லர் 103 ரன்களும் விளாசினர்.

பாக். வெற்றி

பாக். வெற்றி

அடுத்து வந்த வீரர்கள் சொதப்பியதால் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

தோல்விக்கு முற்றுப்புள்ளி

தோல்விக்கு முற்றுப்புள்ளி

கிட்டத்தட்ட 11 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி.... அவமானங்கள்.. பழிச் சொற்கள் என பாகிஸ்தான் அணியில் குழப்பமயம் தான். அனைத்துக்கும் நேற்றைய ஒரே போட்டியில் பதில் சொல்லி வாயடைத்திருக்கிறது பாகிஸ்தான்.

334 ரன்களே எடுக்க முடிந்தது

334 ரன்களே எடுக்க முடிந்தது

349 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து, துவக்க விக்கெட்களை ஆரம்பத்திலேயே பறிகொடுத்தது. பின்னர் சுதாரித்து கொண்ட இங்கிலாந்து அணியால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட்கள் இழப்பிற்கு 334 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

சதங்கள் தந்த தோல்வி

சதங்கள் தந்த தோல்வி

இதன்மூலம், 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஜோ ரூட் மற்றும் பட்லர் சதமடித்தபோதும், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது, அதன் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் தரப்பில், வகாப் ரியாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதிகபட்ச ரன்கள்

அதிகபட்ச ரன்கள்

தொடர்ந்து 11 போட்டிகளில் அடைந்த தோல்விக்கு, இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பாகிஸ்தான் அணியில் யாருமே சதமடிக்காத நிலையில், 348 ரன்கள் எடுத்தது. இதுவே, உலக கோப்பை அரங்கில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள். இதற்கு முன்னர், 2015ல் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா எடுத்த 341 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 4, 2019, 12:04 [IST]
Other articles published on Jun 4, 2019
English summary
After 11 consecutive defeats, Pakistan won the match against england in world cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X