For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் காயத்தோடு ஆடியதால் தான் 4வது டெஸ்டில் சரியாக பந்து வீசவில்லையா? உண்மை என்ன?

லண்டன் : இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் சரியாக பந்து வீசாதது தான் நான்காம் டெஸ்ட் போட்டி தோல்விக்கு காரணம், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தோல்விக்கே அது தான் காரணம் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் கடந்த வாரம் வெளி வந்தன.

அதே சமயம், அஸ்வின் காயத்தோடு தான் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என வந்த தகவல்களை ரவி சாஸ்திரி மறுத்தார். அஸ்வின் தகுதியோடு தான் ஆடினார் என கூறினார்.

எனினும், அஸ்வின் ஐந்தாம் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபடவில்லை. அவர் நிலை என்ன என்பது பற்றி தெளிவான தகவல்கள் கிடைக்காமல் இருந்தது.

மோசமாகிய காயம்

மோசமாகிய காயம்

இப்போது, ரவி சாஸ்திரி சொன்னது பொய் என்பது போல கோலி சொன்ன தகவல் அமைந்துள்ளது. நேற்று டாஸ் போடும்போது பேசிய கோலி, "அஸ்வின் தன் காயத்தை மோசமாக்கிக் கொண்டார்" என குறிப்பிட்டார்.

3வது டெஸ்டில் ஏற்பட்ட காயம்

3வது டெஸ்டில் ஏற்பட்ட காயம்

அஸ்வின் மூன்றாம் போட்டியிலேயே காயம் அடைந்தார். அவர் நான்காம் போட்டியில் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர் தகுதியோடு இருப்பதாக கூறப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டார். அந்த போட்டியில் அவர் மீண்டும் காயம் அடைந்தார் என ஒரு தகவல் வந்தது.

வெளியான தகவல்

வெளியான தகவல்

இப்போது, கோலி கூறியதை வைத்து பார்த்தால், அஸ்வின் மூன்றாம் போட்டியில் ஏற்பட்ட காயத்தோடு விளையாடியுள்ளார். அதனால், காயம் பெரிதாகி உள்ளது. அஸ்வின் ஒழுங்காக பந்து வீசவில்லை, அதனால் தான் இந்தியா தோற்றது என பலரும் கூறிய போது அமைதியாக இருந்தது அணி நிர்வாகம். ரவி சாஸ்திரி கூட அஸ்வின், மொயீன் அலி போல வீசவில்லை என கூறினார். ஆனால், காயத்தோடு அவர் ஆடியதால் தான் சரியாக பந்து வீசவில்லை என்பதை மறைத்துள்ளனர்.

அதிக ஓவர் வீசிய அஸ்வின்

அதிக ஓவர் வீசிய அஸ்வின்

நான்காம் டெஸ்டில் அஸ்வின் அதிக ஓவர் வீசியதும் குறிப்பிடத்தக்கது. அவர் காயத்தில் இருந்தார் என்றால், கோலி அவரை அப்படி விடாமல் பந்து வீச செய்தது சரிதானா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது? மேலும், அஸ்வின் காயமடைந்துள்ளாரா என செய்தியாளர்கள் கேட்ட போது, அவர் உடற்தகுதியோடு இருக்கிறார் என ரவி சாஸ்திரி ஏன் கூறினார்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Story first published: Saturday, September 8, 2018, 15:55 [IST]
Other articles published on Sep 8, 2018
English summary
Ashwin injury got aggravated, revealed by Kohli after denied by Ravi Shasthri
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X