For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் - சாம்பியன்கள் பட்டியல் இதோ.. 2வது முறையாக இந்தியாவுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி துபாயில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கிறது.

Recommended Video

India அணியின் Top Order பற்றி Ricky Ponting கருத்து *Cricket

டி20 உலக கோப்பை அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கு பயிற்சிக்களமாக ஆசிய கோப்பை இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதுவரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி அதிகபட்சமாக ஏழு முறை வென்றுள்ளது.

கொரோனா

கொரோனா

டி20 உலக கோப்பை நடைபெறும் ஆண்டில் ஆசிய கோப்பை நடந்தால் டி20 தொடராகவும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் ஆண்டில் ஆசிய கோப்பை நடந்தால் 50 ஓவர் போட்டியாகும் இந்த தொடர் நடத்தப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டு மற்றும் 21 ஆம் ஆண்டு இந்த தொடர் நடத்தப்படவில்லை. 2020 ஆம் ஆண்டு முதலில் பாகிஸ்தானில் இந்த தொடர் நடத்தப்படுவதாக இருந்தது.

அரசியல் காரணம்

அரசியல் காரணம்

பிறகு இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சினை காரணமாக போட்டி இலங்கைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இலங்கையில் அரசியல் பிரச்சினை ஏற்பட்டதால் தற்போது மீண்டும் துபாயில் தொடர் நடைபெறுகிறது. முதல்முறையாக 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தியா ஹாட்ரிக் பட்டம்

இந்தியா ஹாட்ரிக் பட்டம்

1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும்,1998 மற்றும் 91 மற்றும் 95 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் இலங்கையை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 1997 ஆம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2000 ஆண்டு இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது.2004 மற்றும் 2008 ஆம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி ஸ்ரீலங்கா கோப்பையை கைப்பற்றியது.

மீண்டும் ஹாட்ரிக் வாய்ப்பு

மீண்டும் ஹாட்ரிக் வாய்ப்பு

இதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 2012 ஆம் ஆண்டு வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தானும் 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கையும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 2016 ஆம் ஆண்டு வங்கதேசத்தை தோற்கடித்து இந்தியா ஆசிய கோப்பையை வென்றது. இதே போன்று கடைசியாக நடைபெற்ற தொடரிலும் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றது. தற்போது இந்தியா எட்டாவது முறையாக இந்த தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Tuesday, August 16, 2022, 20:17 [IST]
Other articles published on Aug 16, 2022
English summary
Asia cup 2022 - Champions list of the every tournament - Full details ஆசிய கோப்பை கிரிக்கெட் - சாம்பியன்கள் பட்டியல் இதோ.. 2வது முறையாக இந்தியாவுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X