For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மா பதவி விலகல்??. பிசிசிஐ எடுக்கும் அதிரடி முடிவு.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த சூழலில் ரோகித் சர்மா பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் நேற்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே 170 ரன்களை குவித்தது.

அப்போ ரோகித், கோலி கிடையாதா? இந்திய டி20 அணியில் அதிரடி மாற்றம்.. ரவி சாஸ்த்ரி, கவாஸ்கர் தகவல் அப்போ ரோகித், கோலி கிடையாதா? இந்திய டி20 அணியில் அதிரடி மாற்றம்.. ரவி சாஸ்த்ரி, கவாஸ்கர் தகவல்

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

விராட் கோலி தலைமையில் பல்வேறு வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்த போதும் ஐசிசி தொடர்களில் கடைசி நேரத்தில் சொதப்பியது. இதனால் தான் அவர் கேப்டன்சியில் இருந்தே நீக்கப்பட்டார். தற்போது ரோகித் சர்மாவுக்கும் அதே சூழ்நிலை உருவாகியுள்ளது. டி20ல் அதிக வெற்றிகளை பெற்று தந்த போதும், இங்கிலாந்துடன் படுமோசமாக சொதப்பியது.

பிசிசிஐ அதிரடி முடிவு

பிசிசிஐ அதிரடி முடிவு

இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கும் பிசிசிஐ கிடுக்குப்பிடி போட்டுள்ளது. 35 வயதாகும் ரோகித் சர்மா இனி டி20 கிரிக்கெட்டிற்கு சரிபட்டு வரமாட்டார் என ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எனவே டி20 அணிக்கான கேப்டன்சியில் இருந்து விரைவில் ஓய்வு பெற்றுவிட்டு, ரோகித் சர்மா பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்ளது.

அடுத்த கேப்டன் யார்?

அடுத்த கேப்டன் யார்?

ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா தான் புதிய கேப்டனாக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் மிக மோசமாக சொதப்பினார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சிக்கு மிக சரியாக பொருந்தியுள்ளார்

கேப்டன்சி திறமை

கேப்டன்சி திறமை

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே கோப்பையை வென்றுக்கொடுத்து ஹர்திக் பாண்ட்யா அசத்தினார். அவரின் செயல்பாடுகள் அப்படியே தோனியின் சாயல் தெரிகிறது. எவ்வளவு பதற்றமான சூழல் வந்தாலும் தோனியை போலவே பாண்ட்யா நிதானமாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 11, 2022, 11:59 [IST]
Other articles published on Nov 11, 2022
English summary
BCCI discussing to remove Rohit sharma from Team India t20 Captaincy post,here is the details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X