இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி!

Sourav Ganguly wears his India blaze

மும்பை : பிசிசிஐ தலைவராக அதிகாரபூர்வமாக பதவியேற்ற கங்குலி சென்டிமென்ட் பார்த்து அணிந்து வந்த கோட், லூசாக இருந்ததால், அது பற்றி விளக்கம் கொடுத்து சமாளித்தார்.

கங்குலி பிசிசிஐ-யின் 39வது தலைவராக பதவி ஏற்று சாதனை புரிந்தார். நீண்ட காலம் கழித்து பிசிசிஐ தலைவர் பதவியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் அமர்ந்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை!

தலைமை பண்பு

தலைமை பண்பு

கங்குலி என்றாலே இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது அவர் காட்டிய தலைமை பண்பு மற்றும் மோசமாக இருந்த அணியை கட்டமைத்த விதம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.

பெங்கால் கிரிக்கெட் அதிகாரம்

பெங்கால் கிரிக்கெட் அதிகாரம்

இந்திய அணியில் இருந்து விலகிய பின் சில ஆண்டுகளில் பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் பதவிகளில் இருந்த அவர், அதன் தலைவர் பதவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருக்கிறார்.

தலைவர் ஆனார்

தலைவர் ஆனார்

இடையே பிசிசிஐ பதவிகளிலும் செயலாற்றினார். இந்த நிலையில், சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து நடந்த பிசிசிஐ தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் கங்குலி.

காரணம் இது தான்

காரணம் இது தான்

இத்தனை பெரிய பதவியில் கங்குலி அமரும் நிலையில், இதற்கு மூல காரணமானது அவரது கேப்டன் பதவி தான். இன்று வரை கங்குலி என்றால் அடையாளம் காட்டுவதாக இருப்பது அது தான்.

சென்டிமென்ட் கோட் அணிந்தார்

சென்டிமென்ட் கோட் அணிந்தார்

அந்த கேப்டன் பதவி தான் இன்று அவரை பிசிசிஐ தலைவராகவும் மாற்றி இருக்கிறது. இதை குறிக்கும் வகையில், தான் கேப்டனாக இருந்த போது தனக்கு வழங்கப்பட்ட இந்திய அணி கோட் ஒன்றை பிசிசிஐ தலைவர் ஆன பின் அணிந்தார் கங்குலி.

சொதப்பல்

சொதப்பல்

ஆனால், அதில் சின்ன சொதப்பல் நடந்து விட்டது. 2000மாவது ஆண்டில் கங்குலிக்கு வழங்கப்பட்ட அந்த கோட் இப்போது அவருக்கு பெரிதாக இருந்துள்ளது. அதனால், கோட் அணிந்த பின் அது அவருக்கு அசௌகரியாக இருந்தது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு

பத்திரிக்கையாளர் சந்திப்பு

பிசிசிஐ பொதுக் குழுவில் தலைவர் பதவி ஏற்ற பின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த கங்குலி, வேறு யாரும் அந்த கோட் பற்றி கேட்கும் முன்னர் தானாகவே விளக்கம் கூறி சமாளித்தார்.

லூசாக இருக்கு

லூசாக இருக்கு

"நான் இந்த பிளேசரை இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது பெற்றேன். எனவே, அதை இன்று அணிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், அது இவ்வளவு லூசாக இருக்கும் என்பதை உணரவில்லை" என்றார்.

தெளிவாக இருந்த கங்குலி

தெளிவாக இருந்த கங்குலி

சென்டிமென்ட் சொதப்பினாலும், பிசிசிஐ தலைவராக தான் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருந்தார் கங்குலி. ஊடகங்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு யோசிக்காமல் பதில் அளித்து அசத்தினார்.

முழு ஆதரவு

முழு ஆதரவு

கேப்டன் விராட் கோலிக்கு தான் முழு ஆதரவு அளிப்பேன் என தெரிவித்த அவர் ஐசிசியிடம் இருந்து வர வேண்டிய பணத்தை மீட்பேன், பிசிசிஐ-யை என் வழியில் நான் வழிநடத்துவேன் என தெளிவாக, தீர்க்கமாக கூறினார் கங்குலி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI president Ganguly wears a blazer which he got when made captain. But, the sentiment came with an issue that after the blazer is loose now.
Story first published: Wednesday, October 23, 2019, 19:25 [IST]
Other articles published on Oct 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X