For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கையில் வெற்றி.. 22 வருட காத்திருப்புக்கு விடை சொல்லுமா கோஹ்லி படை?

By Veera Kumar

கொழும்பு: இலங்கையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று 22 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த ஏக்கத்தை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி நீக்கி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

விராட் கோஹ்லி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான பிறகு, வங்கதேசத்துடனான ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்தியா ஆடியது. இந்தியாவின் ஆதிக்கம் ஓங்கியிருந்தாலும்கூட, மழை காரணமாக டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இலங்கை பயணம்

இலங்கை பயணம்

இந்நிலையில், இலங்கையில் வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ள 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் ஆடுவதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இரு தினங்கள் முன்பு கொழும்பு சென்றடைந்தது.

கப் வென்று 22 வருடங்கள்

கப் வென்று 22 வருடங்கள்

இலங்கையில் கடைசியாக இந்திய அணி 1993ம் ஆண்டுதான் டெஸ்ட் தொடரை வென்றது. அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, 3 டெஸ்ட் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. இதன்பிறகு 5 முறை அந்த மண்ணில் டெஸ்ட் தொடர் ஆடியுள்ள இந்தியாவால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை.

அடி வெளுத்துவிட்டார்கள்

அடி வெளுத்துவிட்டார்கள்

வெங்கடேஷ் பிரசாத், குருவில்லா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு இலங்கை சென்ற இந்திய அணி நைய புடைபட்டுதான் திரும்பியது வரலாறு. ஜெயசூர்யா, மகனமா, அட்டபட்டு போன்றோர் இந்திய பந்து வீச்சை, ரசித்து ருசித்து அடித்து ஆடி பல சாதனைகளை தங்கள் பெயர்களுக்கு பின்னால் எழுதிக்கொண்டனர்.

இலங்கை தடுமாற்றம்

இலங்கை தடுமாற்றம்

இந்நிலையில்தான், கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 22 ஆண்டுகால தாகத்தை தணிக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் முடிந்த, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித்தொடர்களில் இலங்கை அடைந்த தடுமாற்றத்தை வைத்து பார்க்கும்போது, ஆரம்பத்திலேயே இந்தியா ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தால் இலங்கையால் எழுந்திருக்க முடியாது என்பது திண்ணமாக தெரிகிறது.

முதல் பயணம்

முதல் பயணம்

இந்தியா 1985ம் ஆண்டு முதல் முறையாக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தது. அப்போதைய உலக சாம்பியனாக இந்தியா இருந்தபோதிலும், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது.

சனத் ஜெயசூர்யா சாதனை

சனத் ஜெயசூர்யா சாதனை

1993ம் ஆண்டு 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா. இதன்பிறகு 1997ல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஆடியது. இரு போட்டிகளுமே டிராவில் முடிந்தது. இந்த தொடரின்போது முழுக்க இலங்கை கையே ஓங்கியிருந்தது. ஒரு டெஸ்ட் இன்னிங்சில் சனத் ஜெயசூர்யா 340 ரன்கள் குவித்து இந்திய பவுலிங்கை திணறடித்தார். ரன் குவிக்கும் ஆர்வத்தில் வெற்றி பெற இலங்கை முயலாததால் போட்டித் தொடர் டிராவில் முடிந்தது.

இனி நடக்குமா?

இனி நடக்குமா?

1999ம் ஆண்டு நடைபெற்ற 1 ஆட்டம் கொண்ட ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி டிராவில் முடிந்தது. 2001ல் 3 டெஸ்ட் தொடரில் ஆடிய இந்தியா 1-2 என்ற கணக்கில் தோற்றது. 2008ல் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடிய இந்தியா, 1-2 என்ற கணக்கில் தோற்றது. 2010ல் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Story first published: Tuesday, August 4, 2015, 10:14 [IST]
Other articles published on Aug 4, 2015
English summary
India's Test captain Virat Kohli has scaled new heights in recent years. His growth as an international cricketer has been on the upswing. And now, he can earn more plaudits if he leads the team to Test series victory in Sri Lanka which will end a 22-year wait.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X