For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சேப்பாக்கம் பிட்சில் இனிமே விளையாட மாட்டோம்...! தல தோனி அதிரடி... காரணம் இதுதான்

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் இனி ஆட விரும்பவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி ஆவேசமாக கூறி உள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் கொல்கத்தா, சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அதில் முதலில் களம் இறங்கிய கொல்கத்தா, 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் 109 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களம் கண்ட தோனி அணி ரன் குவிக்க தடுமாறியது. ஒரு வழியாக ஆட்டத்தை ஜவ்வாக இழுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

CSK Vs KKR: ஜவ்வாக இழுத்து.. இழுத்து.. வொய்டு பந்தில் வென்ற தோனி அணி.. புள்ளி பட்டியலில் முதலிடம் CSK Vs KKR: ஜவ்வாக இழுத்து.. இழுத்து.. வொய்டு பந்தில் வென்ற தோனி அணி.. புள்ளி பட்டியலில் முதலிடம்

2வது போட்டி

2வது போட்டி

போட்டி குறித்து தல தோனி கூறியதாவது: மீண்டும் முதல் போட்டி போலவே 2வது போட்டியும் அமைந்து விட்டது. பிட்ச் பற்றி புகார் கூறுகிறோம். ஆனால் வெற்றி பெறுகிறோம்.

ரன் சேர்ப்பு கடினம்

ரன் சேர்ப்பு கடினம்

இது போன்ற பிட்சுகளில் ஆட விரும்புகிறோம் என்று நான் கருதவில்லை. காரணம் எங்கள் பேட்ஸ்மென்களுக்கே ரன்கள் எடுப்பது கடினமாகி விடுகிறது. அதுவும் முதலில் பேட் செய்தால் சொல்லவே வேண்டாம். மிகவும் கடினம்.

சாதகமான பிட்சுகள் தேவை

சாதகமான பிட்சுகள் தேவை

பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்கள் அமைந்தால் சரியாக இருக்கும். அணியை வழிநடத்துவதில் எனக்கு என்று தனிப்பட்ட முறையில் திட்டம் கிடையாது. அணிச்சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை திட்டமிடுதல் எதுவும் இல்லை, அதிக திட்டமிடுதல் தேவையில்லை என்று தோனி கூறினார்.

சர்ச்சையான மைதானம்

சர்ச்சையான மைதானம்

முன்னதாக, ஐபிஎல் 2019 தொடக்கப் போட்டியானது, மிகுந்த எதிர்பார்ப்களுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த முதல் போட்டியில் மொத்தமாகவே 141 ரன்கள் எடுக்கப்பட்டது. அப்போதும் மைதானம் குறித்த சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 10, 2019, 10:25 [IST]
Other articles published on Apr 10, 2019
English summary
Chennai super kings captain dhoni much more worried about chepauk pitch.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X