For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களின் ஒரே ஆறுதல் கிரிக்கெட் தான்! ரஷித் கான் பெருமிதம்

துபாய் : கடந்த சில ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட்டில் பன்மடங்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களின் ஒரே ஆறுதலாக கிரிக்கெட் அமைந்துள்ளதாக ஆப்கனின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றது

ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றது

ஆப்கானிஸ்தான் அணி 2020இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 2010இல் டி20 உலகக்கோப்பையில் ஆடிய ஆப்கன் அணி இந்த முறை நேரடியாக தகுதி பெற்றுள்ளதோடு, மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கும் என்ற பேச்சு உள்ளது.

மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கிரிக்கெட்

மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கிரிக்கெட்

இந்த மகிழ்ச்சிகரமான வேளையில், ஆப்கன் வீரர் ரஷித் கான் கிரிக்கெட் ஆப்கன் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என தெரிவித்தார். கடந்த ஐந்து - ஆறு ஆண்டுகளில் கிரிக்கெட் எல்லாவற்றையும் மாற்றி விட்டது என தெரிவித்தார்

முகத்தில் புன்னகை

முகத்தில் புன்னகை

ஆப்கன் ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் ரசிக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் எங்கள் 100 சதவீதத்தை வழங்க உழைக்கிறோம். ஆப்கனில் என்ன நடக்கிறது என தெரியும். அவர்கள் முகத்தில் கிரிக்கெட் தவிர வேறு எதுவும் புன்னகையை வரவழைக்க முடியாது எனவும் கூறினார் ரஷித் கான்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கன்

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கன்

ஆப்கன் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து பெற்றது குறிப்பிடத்தக்கது. தன் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணிக்கு எதிராக ஆடியது ஆப்கன் அணி. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது.

டி20யில் கலக்கும் ஆப்கன்

டி20யில் கலக்கும் ஆப்கன்

டி20 போட்டிகளை பொறுத்தவரை ஆப்கன் அணி உலகின் முன்னணி அணிகளை அச்சுறுத்தும் அணி என கூறலாம். அந்த அணி தற்போது தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும், சுழற் பந்துவீச்சில் ஆப்கன் அணி சிறந்து விளங்கி வருகிறது. ரஷித் கான் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 30, 2019, 17:32 [IST]
Other articles published on Jan 30, 2019
English summary
Cricket bring smile on Afghanistan people says Rashid Khan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X