For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மத்தவங்க 5 கோடி வாங்குவாங்க.. தோனி ஒரு பைசா கூட வாங்கலை.. நன்றி மறக்காத தல.. நெகிழும் ரசிகர்கள்!

Recommended Video

Dhoni Bat Secret: தோனி ஒரு ருபாய் கூட வாங்கவில்லை.. நன்றி மறக்காத தல..நெகிழும் ரசிகர்கள்!- வீடியோ

மும்பை : தோனியின் பேட் குறித்த செய்தி ஒன்று தோனி ரசிகர்களிடையே பரபரப்பாக உலா வருகிறது.

தோனி குறித்து மோசமான விமர்சனங்கள் வெளியாகி ஓய்ந்த நிலையில், அவர் சத்தமே இல்லாமல் இதுவரை செய்த காரியம் ஒன்று குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

தோனி என்ன செய்தாலும் அது உடனே இந்தியாவில் பரபரப்பாக பேசப்படும். அவரது ராணுவ முத்திரை கிளவுஸுக்கு அடுத்து அவரது பேட்டின் லோகோ குறித்து பேசப்பட்டு வருகிறது.

மூன்று பிராண்டுகள்

மூன்று பிராண்டுகள்

தோனி ரீபோக் பிராண்ட்டின் லோகோவை தான் தன் பேட்டில் அதிகம் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் மூன்று பிராண்டுகளின் லோகோவை பயன்படுத்தி வந்தார். இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துகளை தயார் செய்து அளிக்கும் எஸ்ஜி நிறுவனத்தின் லோகோ, மற்றொரு கிரிக்கெட் உபகரண தயாரிப்பு நிறுவனமான பாஸ் (BAS) ஆகியவற்றின் லோகோவையும் தன் பேட்டில் பயன்படுத்தினார்.

ஏன் இப்படி செய்கிறார்?

ஏன் இப்படி செய்கிறார்?

தோனி திடீரென ஏன் இப்படி செய்கிறார்? ஏன் பிராண்டுகளை ஒரே தொடரில், ஒரே போட்டியில் கூட மாற்றிக் கொண்டே இருக்கிறார் என அவரது ரசிகர்கள் குழம்பினர். இது குறித்த தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது.

நன்றி பாராட்டும் தோனி

நன்றி பாராட்டும் தோனி

தோனி தன் துவக்க காலத்தில் தனக்கு உதவிய கிரிக்கெட் உபகரண நிறுவனங்களின் லோகோவை பணம் பெற்றுக் கொள்ளாமல் உலகக்கோப்பை தொடரில் தன் பேட்டில் பயன்படுத்தி வருகிறார். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தோனி இதை செய்து வருகிறார்.

5 கோடி வேண்டாம்

5 கோடி வேண்டாம்

மற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஒரு நிறுவனத்தின் லோகோவை தங்கள் பேட்டில் பயன்படுத்த 5 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், தோனி பணம் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை.

சிக்கல்

சிக்கல்

இதுவரை தோனி ஆஸ்திரேலியாவின் ஸ்பார்டன் என்ற நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்தார். அந்த நிறுவனம் தற்போது சிக்கலில் உள்ளது. இந்த இடைவெளியில் தான் தன்னை வளர்த்து விட்ட நிறுவனங்களுக்கு இலவச விளம்பரம் அளித்து வருகிறார் தோனி.

Story first published: Thursday, July 4, 2019, 22:08 [IST]
Other articles published on Jul 4, 2019
English summary
Cricket World cup 2019 : Dhoni using different branding as a friendly gesture
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X