தல தோனிக்கு என்னாச்சு..? டெல்லிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில் சிக்கல்.. ரசிகர்கள் கவலை

சென்னை:தல தோனிக்கு காய்ச்சலும், முதுகுவலியும் சரியாகாததால், டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

சென்னையில் நடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டது.

அதாவது, தோனி, ஜடேஜா காய்ச்சலால் போட்டியில் ஆடாதது, டுப்ளெசிஸ் போட்டியில் விளையாடாதது காரணம் என்று கூறப்பட்டது. அதன் எதிரொலியாக, மும்பை அணி எளிதாக சென்னை அணியை வீழ்த்தியது.

RCB vs RR:பெங்களூருவில் இடைவிடாத மழை... பெங்களூரு Vs ராஜஸ்தான் போட்டி தாமதம்.. ரசிகர்கள் கவலை

வெளியான தகவல்

வெளியான தகவல்

கடந்த போட்டியில் தோனி மற்றும் ஜடேஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தற்காலிக கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறினார். இந்நிலையில் தற்போது தோனி மற்றும் ஜடேஜாவின் உடல்நிலை பரிசோதனைக்கு பிறகு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தோனிக்கு காய்ச்சல்

தோனிக்கு காய்ச்சல்

அதன்படி தோனி இன்னும் காய்ச்சலில் இருந்து விடுபடவில்லை, முதுகு வலியும் நீங்கவில்லை. ஜடேஜா காய்ச்சலில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பினார்.

தோனி விளையாடுவாரா?

தோனி விளையாடுவாரா?

அதனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது. ஆனால், தோனி இன்னும் முழுமையாக குணமாகாததால் அவர் பங்கேற்பது கேள்விக் குறியாகி உள்ளது.

டிக்கெட்டுகள் விற்பனை

டிக்கெட்டுகள் விற்பனை

அதனால் தோனிக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Csk captain dhoni may miss the match against delhi capitals due to fever.
Story first published: Tuesday, April 30, 2019, 21:04 [IST]
Other articles published on Apr 30, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X