
இளம் வீரர்கள்
இது போன்று வெற்றி பெற வேண்டிய சில போட்டிகளை பந்துவீச்சு மூலம் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், சென்னை அணியின் முகேஷ் சௌத்ரி, ஷிம்ரஜித் சிங் ஆகியோருக்கு தோனி தொடர்ந்து ஆதரவு வழங்கினார். இதன் மூலம் தற்போது இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

தோனி பாராட்டு
நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் முகேஷ் சௌத்ரி 4 ஓவர் வீசி 23 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிம்ரஜித் சிங்கும் 4 ஓவர் வீசி 22 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இவ்விரு வீரர்களையும் நேற்று போட்டி முடிந்ததும் தோனி பாராட்டினார்.

2 வேகப்பந்துவீச்சாளர்கள்
இளம் வீரர்கள் இருவரும் தற்போது தான் பந்துவீச்சில் அனுபவம் பெற்று வருவதாக கூறினார். சிஎஸ்கே அணியில் அடுத்த சீசனில் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் வந்துவிடுவார்கள், தற்போது அணியில் இருக்கும் வீரர்களை வைத்து ஒரு நல்ல அட்டர்க்கை உருவாக்க முடியும் என்று தோனி நம்பிக்கை தெரிவித்தார்.

யார் அவர்கள்?
இலங்கை வீரர் மதிஷா, தீபக் சாஹர், சாம் கரண் ஆகியோரை மனதில் வைத்து தோனி இப்படி ஒரு பதிலை கூறி இருக்கிறார் என்று தெரிகிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணி பலமான அணியை அடுத்த சீசனில் உருவாக்கிவிடும் என்று ரசிகர்களுக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது.