For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த ஆண்டும் விளையாடும் தோனி..சிஎஸ்கேக்கு பலன் தருமா.. சிஎஸ்கே சந்திக்கப்போகும் பிரச்சினைகள் என்ன?

மும்பை: அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவேன் என்று தோனி கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் தோனி எடுத்த முடிவு சரியானதா, இதனால் சிஎஸ்கே என்ன பிரச்சினைகளை சந்திக்கப்போகிறது என்பது குறித்து தற்போது காணலாம்.

பொதுவாக எமோசனலாக நாம் முடிவு எடுத்தால், அதற்கு பின்னால் ஏற்படும் விளைவுகளை பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. நமது உணர்ச்சிகள் நம் கண்களை மறைத்து விடும்.

ஐபிஎல் 2022: ரன் ரேட் முறை என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது?.. எளிய விளக்கம் இதோ! ஐபிஎல் 2022: ரன் ரேட் முறை என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது?.. எளிய விளக்கம் இதோ!

வயதால் பேட்டிங்கில் சிக்கல்

வயதால் பேட்டிங்கில் சிக்கல்

இப்போது தோனி சென்னை மக்கள் முன்னணியில் நன்றி தெரிவிக்க அடுத்த சீசனிலும் விளையாடுவேன் என்று கூறிவிட்டார். தோனிக்கு தற்போது வயது 40. அடுத்த சீசனில் 41 ஆகிவிடும். இந்த சீசனில் கேப்டன் பதவி இல்லாத போது சிறப்பாக விளையாடிய தோனி, கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, மீண்டும் பேட்டிங்கில் சற்று சரிவை சந்தித்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

தோனியின் உடல் தகுதி குறித்து எந்த அச்சமும், கவலையும் இல்லை. அவரலால் 50 வயதானாலும் கூட ஓடி ஆடி விளையாட முடியும். ஆனால், பேட்டிங்கில் பழைய படி அதிரடியாக ஆடுவது என்பது சிரமமான விஷயமே. இதனால் விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் மட்டுமே தோனியால் சிறப்பாக செயல்பட முடியும்.

மினி ஏலத்தில் சிக்கல்

மினி ஏலத்தில் சிக்கல்

சிஎஸ்கே அணியில் உத்தப்பா, ராயுடு, பிராவோ ஆகியோர் அடுத்த ஆண்டு விளையாடுவது சிரமமே. இவர்களுக்கு மாற்றாக வீரர்களை எடுக்க வேண்டும். அதற்கு மினி ஏலத்தில் சிஎஸ்கேவிடம் பணம் இருக்க வேண்டும். தற்போது தோனி ஓய்வு பெற்று இருந்தால் சிஎஸ்கேவிடம் கூடுதலாக 12 கோடி ரூபாய் இருந்திருக்கும்.

பிரச்சினைகள்

பிரச்சினைகள்

பணம் அதிகமாக இருக்கும் போது, மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியால் சாம் கரண் , பென் ஸ்டோக்ஸ் மற்றும் தினேஷ் பானா போன்ற வீரர்களை குறிவைத்து எடுக்க முடியும். ஆனால் தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்பதால், சிஎஸ்கே தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை மற்ற அணிகளுடன் போட்டி போட்டு வாங்க முடியாது. இதற்கு எல்லாம் தோனி பிளான் "பி"யை நிச்சயம் வைத்திருப்பார் என நம்புவோம்.

Story first published: Saturday, May 21, 2022, 21:15 [IST]
Other articles published on May 21, 2022
English summary
CSK MS Dhoni decision to Play next season advantage or disadvantage அடுத்த ஆண்டும் விளையாடும் தோனி..சிஎஸ்கேக்கு பலன் தருமா.. சிஎஸ்கே சந்திக்கப்போகும் பிரச்சினைகள் என்ன?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X