For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2019:அடேயப்பா.... இத்தனை சாதனைகளும் யெல்லோ ஆர்மியிலா? வாவ்... சலாம் போடும் ரசிகர்கள்

சென்னை:ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்ளும் சென்னை அணி, ஐபிஎல் தொடர் 2019ல் இதுவரை செய்துள்ள சாதனைகளை பார்க்கலாம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் அணியுடனான போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 2019ம் ஆண்டு ஐபிஎல்லில் இதுவரை தோனி 32 ரன்கள் அடித்துள்ளார்.

அந்த தப்பை பண்ணிய ரோகித் சர்மா.... ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம் அந்த தப்பை பண்ணிய ரோகித் சர்மா.... ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

ரெய்னா 49

ரெய்னா 49

அதில் 1 சிக்சர், 2 பவுண்டரிகள் அடங்கும். கோலியின் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோனி பேட் செய்யவில்லை. 2019 ஐபிஎல் தொடரில் இதுவரை ரெய்னா 49 ரன்கள் அடித்துள்ளார்.

5000 ரன்கள் சாதனை

5000 ரன்கள் சாதனை

முதல் போட்டியில் 15 ரன்களை தொட்ட போது, ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் 5,034 ரன்கள் அடித்துள்ளார்.

ஒரே விக்கெட்

ஒரே விக்கெட்

2019 ஐபிஎல் தொடரில் 25 பந்துகள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் ப்ராவோ. முதல் போட்டியில் வீசிய ஒரே பந்தில் விக்கெட்டை எடுத்தது மறக்க முடியாத ஒன்று.

தமிழ்புலவர்

தமிழ்புலவர்

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 48 பந்துகள் வீசி 50 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் தமிழ் புலவர் ஹர்பஜன். பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

ஜாதவ் 40

ஜாதவ் 40

2019 ஐபிஎல் தொடரில் இதுவரை கேதர் ஜாதவ் 40 ரன்கள் அடித்துள்ளார். அதிக பட்சமாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 27 ரன்கள் அடித்தார். அதே நேரத்தில் முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காத வாட்சன், 2-வது போட்டியில் அதிரடி காட்டி 44 ரன்கள் அடித்தார். இந்தத் தொடரில் சென்னை அணியில் தனிநபர் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

Story first published: Sunday, March 31, 2019, 13:21 [IST]
Other articles published on Mar 31, 2019
English summary
CSK players dhoni, harbhajan singh and other made a good records in IPL 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X