For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேபிம்மா... என்ன பண்றீங்க.. கையைக் கழுவப் போறேன் டாடி.. அசத்தல் வார்னர்!

மெல்போர்ன்: கொரோனாவைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி அதிகரித்து வரும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குட்டி மகளுக்கு கை சுத்தம் பற்றி போதித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவரும் கொரோனாவைரஸ் பரவல் காரணமாக வீட்டோடு இருக்கிறார். வீட்டில் இருக்கும் நேரத்தில் எல்லாரையும் போல கொரோனா விழிப்புணர்வுக்காக ஏதாவது செய்தபடி உள்ளார்.

அந்த வகையில் தனது மகளுக்கு கை சுத்தம் பற்றி அவர் போதித்த காட்சி அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது.

வார்னரும் அவரது மகளும்

வார்னரும் அவரது மகளும்

அந்த வீடியோவில் டேவிட் வார்னின் குட்டி மகள் தனது கையில் சானிட்டைசரை ஊற்றி கையை சுத்தம் செய்கிறார். அதை பக்கத்தில் இருந்தபடி வீடியோ எடுக்கும் வார்னர், கையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறுகிறார் மகளிடம். அந்த குட்டி தேவதையும் அழகாக கேட்டபடி கையை படு அம்சமாக சுத்தம் செய்கிறது.

சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்

கையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி கையைக் கழுவ வேண்டும். அப்படி செய்தால்தான் எதுவும் நம்மைத் தாக்காது. எனவே நாம் கை சுத்தத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று வார்னர் தனது மகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார். அந்தக் குட்டி பாப்பாவும் சமர்த்தாக கேட்டுக் கொள்கிறது. பார்க்கவே அழகாக இருக்கிறது இந்த வீடியோ.

சோயிப் அக்தர் போட்ட டிவீட்

அதேபோல பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தரின் டிவிட்டர் பதிவு ஒன்று கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. அதாவது கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மற்றும் நர்ஸ் ஒருவரின் புகைப்படம் அதில் உள்ளது. நீண்ட நேரமாக இரவும் பகலாக வேலை பார்த்து வரும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்களின் புகைப்படத்தை சோயிப் அக்தர் ஷேர் செய்துள்ளார்.

டாக்டர்கள், நர்சுகளுக்கு மரியாதை

டாக்டர்கள், நர்சுகளுக்கு மரியாதை

இவர்கள் முகத்தில் மாஸ்க்கை மாட்டியபடியே தொடர்ந்து பணியாற்றி வருவதால் இவர்களின் முகத்தில் காணப்படும் அடையாளக் குறி பார்க்கவே வேதனையாக இருக்கிறது. இவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாருங்கள். தொடர்ந்து நீண்ட நேரமாக பணியாற்றியதன் சோர்வை முகம் காட்டுகிறது. ஆனாலும் இவர்களின் பணி நிற்கவில்லை என்று கூறி அவர்களுக்கு ஹார்ட்டின் போட்டுள்ளார் சோயிப் அக்தர். நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 24, 2020, 17:36 [IST]
Other articles published on Mar 24, 2020
English summary
Australian Cricketer David Warner has taught his daguther the importance of hand Sanitizer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X