For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு நொடி எல்லோரையும் மிரள வைத்த ஹர்பஜன் சிங்.. நல்ல வேளை மோசமா எதுவும் நடக்கலை!!

Recommended Video

Harbhajan mankad moment | எல்லோரையும் மிரள வைத்த ஹர்பஜன் சிங்

டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் சிங் ஒரு நொடி எல்லோரையும் மிரள வைத்தார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது டெல்லி அணி. அந்த அணிக்கு தவான் சிறப்பான துவக்கம் அளித்து ஆடி வந்தார். 1 விக்கெட் வீழ்ந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடி வந்தார்.

என்னய்யா இப்படி பண்றீங்க? மேட்ச் டெல்லி-ல நடக்குதா? இல்லை சென்னை-ல நடக்குதா?என்னய்யா இப்படி பண்றீங்க? மேட்ச் டெல்லி-ல நடக்குதா? இல்லை சென்னை-ல நடக்குதா?

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

எட்டாவது ஓவரில் ஹர்பஜன் சிங் பந்து வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை ஹர்பஜன் சிங் வீச ஓடி வந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்ட்ரைக் பேட்ஸ்மேன் தவானுக்கு எதிர்முனையில் நின்று கொண்டிருந்தார்.

மிரள வைத்த ஹர்பஜன்

மிரள வைத்த ஹர்பஜன்

பந்து வீச ஓடி வந்த ஹர்பஜன் சிங் கிரீஸ் அருகே வந்தவுடன் அப்படியே நின்றார். ஸ்ரேயாஸ் ஐயரை பார்த்து முறைத்த ஹர்பஜன் சிங் மீண்டும் பந்து வீசச் சென்றார். அதாவது ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசும் முன், கிரீஸை விட்டு முன்னேறிச் செல்கிறார் என்பதைத் தான் ஹர்பஜன் இப்படி முறைப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

அஸ்வின் சர்ச்சை

அஸ்வின் சர்ச்சை

நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், இதே போன்ற சம்பவத்தின் போது ரன் அவுட் செய்தது பெரும் சர்ச்சை ஆனது. அந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள் இன்னும் நடந்து வரும் நிலையில், ஹர்பஜன் அதை மீண்டும் நினைவுபடுத்தினார்.

அதுவரைக்கும் சந்தோஷம்

அதுவரைக்கும் சந்தோஷம்

ஹர்பஜன் சிங் முறைத்த உடன் பலரும் லேசாக அதிர்ந்தாலும், அஸ்வின் போல அவர் ரன் அவுட் செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால் வார்த்தைகளால் எச்சரிக்கை கூட விடுக்கவில்லை. அதுவரைக்கும் சந்தோஷம் என அஸ்வின் விவகாரத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் ஐபிஎல் நிர்வாகம் நினைத்திருக்கும்!!

Story first published: Tuesday, March 26, 2019, 23:17 [IST]
Other articles published on Mar 26, 2019
English summary
DCvCSK IPL 2019 : Harbhajan singh showed a mankad moment against Shreyas Iyer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X