For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை டி20 அணியில் இருந்து தூக்கினதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. கோலி எஸ்கேப்

மும்பை : இந்திய டி20 அணியில் இருந்து தோனி நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தேர்வாளர்கள் ஏற்கனவே கூறிவிட்டார்கள் என கூறியுள்ளார் கோலி.

தோனி டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. கோலி தான் இந்த நீக்கத்திற்கு காரணம் என சில ரசிகர்கள் கூறினர்.

இந்த நிலையில், தனக்கும் தோனி நீக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி தப்பித்துக் கொண்டுள்ளார் கோலி.

தோனிக்கு எச்சரிக்கையா?

தோனிக்கு எச்சரிக்கையா?

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தோனிக்கு இடம் மறுக்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் தோனி சரியாக ஆடாததால் அவருக்கு இது எச்சரிக்கையா? என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின.

தேர்வாளர்கள் விளக்கம் அளித்தனர்

தேர்வாளர்கள் விளக்கம் அளித்தனர்

எனினும், தேர்வாளர்கள் இதற்கு விளக்கம் அளித்தனர். "டி20 உலகக்கோப்பை வரும் 2020 இல் நடைபெற உள்ளது. அது வரை தோனி கிரிக்கெட் ஆடுவாரா என்பது உறுதியில்லை. தற்போது தோனிக்கு 37 வயது ஆகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் போட்டிகள் உலகக்கோப்பை வரை தோனி கிரிக்கெட் ஆட திட்டமிட்டுள்ளார். எனவே, தோனியை டி20 அணிகளில் ஆட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. புதிய வீரர்களை அடையாளம் காண வேண்டிய நிலை வந்துவிட்டது" என கூறினர்.

எந்த சம்பந்தமும் இல்லை

எந்த சம்பந்தமும் இல்லை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி முடிந்த பின்னர் கோலியிடம் தோனி நீக்கம் பற்றி கேட்ட போது, "இது பற்றி தேர்வாளர்கள் என்ன நடந்தது என விளக்கம் அளித்து விட்டார்கள் என நினைக்கிறேன். நான் அந்த (தோனியின் நீக்கம் பற்றிய) பேச்சுக்களில் பங்கு பெறவில்லை. இதை தான் தேர்வாளர்கள் கூறினார்கள்" என தனக்கும், தோனி நீக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நியாயப்படுத்தும் வகையில் பேசினார் கோலி.

தோனி வழி விடுகிறார்

தோனி வழி விடுகிறார்

மேலும் இது பற்றி பேசிய கோலி, "மக்கள் இந்த விஷயத்தை பற்றி பல விதமாக பேசுகிறார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லை. அவர் இந்த அணியின் முக்கியமானவர். அவர் டி20 அணியில் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்பு பெறுவார்கள் என நினைக்கிறார். அவர் ஒருநாள் அணியில் தொடர்ந்து விளையாடுவார்" என்றார்.

Story first published: Friday, November 2, 2018, 11:58 [IST]
Other articles published on Nov 2, 2018
English summary
Dhoni gave chance to youngsters in T20 says Captain Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X