For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா சாமி ஆளை விடு! சாஹலை பார்த்தவுடன் தெறித்து ஓடிய தோனி.. அப்படி என்ன நடந்துச்சு?

Recommended Video

சாஹலை பார்த்தவுடன் தெறித்து ஓடிய தோனி- வீடியோ

வெல்லிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த தொடரின் முடிவில் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பின் சாஹலிடம் இருந்து தப்பிக்க வேண்டி தோனி வேகமாக ஓடினார்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஆமாம், தோனி ஏன் சாஹலை பார்த்து பயந்து ஓட வேண்டும்?

சாஹல் எடுக்கும் பேட்டி

சாஹல் எடுக்கும் பேட்டி

இந்திய அணியில் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் சாஹல், இந்திய வீரர்களை அவ்வப்போது பேட்டி எடுத்து தன் மொபைல் கேமராவில் பதிவு செய்து அதை வெளியிட்டு வருகிறார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமாகி வருகிறது.

பிசிசிஐ ஆதரவு

சாஹல் டிவி என்ற பெயரில் இந்த பேட்டிகளை, பிசிசிஐ-யும் தன் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. ஆரம்பத்தில் எப்போதாவது பேட்டி எடுக்க ஆரம்பித்த சாஹல், இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஒவ்வொரு போட்டியிலும் பேட்டி எடுத்து வருகிறார்.

தோனியிடம் பேட்டி

தோனியிடம் பேட்டி

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு பின்னர் தோனியை தன் சாஹல் டிவி-யில் பேட்டி எடுத்தே ஆக வேண்டும் என முடிவு செய்த சாஹல், தோனி அருகே சென்றார்.

மின்னல் வேகத்தில் ஓடிய தோனி

சாஹல் மொபைலை எடுத்துக் கொண்டு அருகில் வந்த உடன் மின்னல் வேகத்தில் ஓடி எஸ்கேப் ஆனார் தோனி. தோனி சாஹல் டிவியில் வரவேண்டாம் என நினைத்து ஓடினார் என்பது மட்டுமே தெரிய வந்துள்ளது.

சாஹல் பந்துவீச்சு

சாஹல் பந்துவீச்சு

தோனி ஏன் அப்படி நினைக்கிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை தோனியிடம் எடக்கு மடக்காக கேள்வி கேட்க சாஹல் காத்துக் கொண்டு இருக்கிறாரோ? எது எப்படியோ, நியூசிலாந்து தொடரில் சாஹல் சிறப்பாக பந்து வீசி 9 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இதன் மூலம், உலகக்கோப்பை அணியில் தன் இடத்துக்கும் துண்டு போட்டு விட்டார்.

Story first published: Monday, February 4, 2019, 17:16 [IST]
Other articles published on Feb 4, 2019
English summary
Dhoni runs away to avoid Chahal TV exposure after fifth ODI against NewZealand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X