முதல் முறை ஸ்டம்பிங்கான டோணி

Posted By: Staff

குவஹாத்தி: ஒருதினப் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்த கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி, டி-20 போட்டிகளில் முதல்முறையாக ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜாம்பா பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் பெய்னே ஸ்டம்பிங் செய்ய டோணி ஆட்டமிழந்தார்.

Dhoni stumped

தனது 80வது டி-20 போட்டியில் விளையாடிய டோணி, முதல் முறையாக டி-20 போட்டிகளில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகியுள்ளார்.

ஒருதினப் போட்டிகளில், 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பரான கேப்டன் கூல் டோணி, 306 ஒருதினப் போட்டிகளில் ஒரு முறை மட்டுமே ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகியுள்ளார்.

90 டெஸ்ட் போட்டிகளில், மூன்று முறை ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகியுள்ளார்.

Story first published: Wednesday, October 11, 2017, 17:27 [IST]
Other articles published on Oct 11, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற