For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி டி20 மேட்ச்ல டொக்கு வைப்பேன்னு நினைச்சியா.. ஹாட்ரிக் சிக்ஸ்.. அதிர வைத்த டிராவிட்!

மும்பை : ராகுல் டிராவிட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பது மட்டுமே பலரின் எண்ணமாக உள்ளது.

Recommended Video

Records that Dravid achieved in test that Sachin could not

ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்துள்ள அவர், ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியிலும் ஆடி உள்ளார்.

இதுவரை யாரும் டிராவிட் இந்த மாதிரி அதிரடி ஆட்டம் ஆடி பார்த்திருக்க முடியாது என கூறும் வகையில் அந்தப் போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

தடுப்புச் சுவர்

தடுப்புச் சுவர்

இந்திய அணியின் தடுப்புச் சுவர் என அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். அந்த பெயருக்கு காரணம் அவரது தடுப்பாட்டம் தான். டெஸ்ட் போட்டிகளில் அவரது தடுப்பாட்டத்தை தாண்டி விக்கெட் வீழ்த்துவது எதிரணிகளுக்கு கடினமாக இருந்ததால் அந்த பெயர்.

டெஸ்ட் வீரர் டிராவிட்

டெஸ்ட் வீரர் டிராவிட்

டெஸ்ட் வீரர் என்றே அறியப்பட்ட டிராவிட்டின் டெஸ்ட் சராசரி 52.31 ஆகும். 164 போட்டிகளில் 13,288 ரன்கள் குவித்துள்ளார். அவரது டெஸ்ட் ஸ்ட்ரைக் ரேட் 42.51 ஆகும். அது டெஸ்ட் போட்டிகளில் கூட மிகக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.

ஒருநாள் போட்டி ரன் குவிப்பு

ஒருநாள் போட்டி ரன் குவிப்பு

344 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார் டிராவிட் அதில் 10,889 ரன்கள் குவித்துள்ளார். அதில் அவரது பேட்டிங் சராசரி 39.16 ஆகும். அதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 71.24 ஆகும். இதுவும் மிகக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் தான். அதனாலேயே அவர் டி20 அணியில் அப்போது தேர்வு செய்யப்படவில்லை.

டி20 அனுபவம்

டி20 அனுபவம்

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டனாக ஆடி உள்ள ராகுல் டிராவிட், அதிலும் பெரிய தாக்கதை ஏற்படுத்தியதில்லை. அதனால், டிராவிட் அதிரடி ஆட்டம் ஆட மாட்டார் என்றே பலரும் கருதினர். ஆனால், கடைசியாக அதை ஒரு போட்டியில் மாற்றிக் காட்டினார்.

ஒரே ஒரு டி20

ஒரே ஒரு டி20

இங்கிலாந்து நாட்டில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ராகுல் டிராவிட் டி20 அணியில் சேர்க்கப்பட்டார். அதுவரை இந்திய டி20 அணியில் சேர்க்கப்படாத நிலையில், தன் முதல் டி20 போட்டியில் டிராவிட் பங்கேற்றார். அந்தப் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.

இந்தியா அதிரடி

இந்தியா அதிரடி

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு பார்த்திவ் பட்டேல் - அஜின்க்யா ரஹானே துவக்கம் அளித்தனர். பார்த்திவ் 10 ரன்களில் வெளியேறிய நிலையில் டிராவிட் பேட்டிங் ஆட வந்தார். ரஹானே அப்போது அதிரடி ஆட்டம் ஆடி வந்தார்.

டிராவிட் ஹாட்ரிக் சிக்ஸ்

டிராவிட் ஹாட்ரிக் சிக்ஸ்

ரஹானேவுக்கு ஈடு கொடுத்து டிராவிட் ஆட மாட்டார் என்றே கருதப்பட்டது. அதே போலவே ஆடத் துவங்கினார் டிராவிட். ஒரு கட்டத்தில் 14 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். பின்னர் 11வது ஓவரில் இங்கிலாந்தின் சமித் பட்டேல் வீசிய கடைசி மூன்று பந்துகளை வரிசையாக சிக்ஸருக்கு அனுப்பி மிரட்டினார் டிராவிட்.

நம்ப முடியாத ஆட்டம்

நம்ப முடியாத ஆட்டம்

டிராவிட் அது போல அதிரடி ஆட்டம் ஆடி யாரும் பார்த்திருக்கவே முடியாது எனக் கூறும் வகையில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து மிரட்டினார். அதுவே அவர் அடித்த ஒரே ஹாட்ரிக் சிக்ஸாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அவர் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 147.61.

குறைந்த ரன் ரேட்

குறைந்த ரன் ரேட்

இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. டிராவிட் நிதான ஆட்டம் ஆடுவார் என கூறிய நிலையில், அதற்கு மாறாக அந்தப் போட்டியில் நடந்தது. டிராவிட் அவுட் ஆன போது இருந்த ரன் ரேட் 9. ஆனால், அவர் சென்ற பின் கோலி, தோனி, ரோஹித் என அதிரடி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதனால், இந்தியா 10 விக்கெட்களையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 19.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியே டிராவிட்டின் கடைசி டி20 போட்டியாகவும் அமைந்தது. டிராவிட்டின் கடைசி ஆசையாக இந்த டி20 போட்டி வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும் அப்போது பேசப்பட்டது.

Story first published: Monday, May 4, 2020, 8:00 [IST]
Other articles published on May 4, 2020
English summary
Dravid hit a hatrick six in his only T20I match. It happens in England tour in 2011. That was his first and last T20I.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X