கோஹ்லிக்கு முதல் முட்டை

Posted By: Staff

குவஹாத்தி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் தான் சந்தித்த 2வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் கேப்டன் விராட் கோஹ்லி அவுட்டானார். இதுவரை 52 டி-20 போட்டிகளில் 47 முறை அவர் பேட்டிங் செய்துள்ளார்.

இப்போதுதான் கோஹ்லி முதல் முறையாக ஒரு டி20 போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரின் போது, சென்னையில் நடந்த ஆட்டத்தின்போதும், கோஹ்லி டக் அவுட்டானார்.

இதற்கு முந்தைய சாதனை

இதற்கு முந்தைய சாதனை

டி-20 போட்டிகளில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி, இலங்கையின் தில்ஷான் ஆகியோர் 5 போட்டிகளில் டக் அவுட்டானதே சாதனையாகும்.

12 முறை டக் அவுட்

12 முறை டக் அவுட்

191 ஒருதினப் போட்டிகளில், 30 சதம், 45 அரை சதங்கள் அடித்துள்ள கோஹ்லி, 12 முறை டக் அவுட்டாகியுள்ளார். ஒருதினப் போட்டிகளில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா 34 முறையும், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி 30 முறையும் டக் அவுட்டாகிய சாதனையை புரிந்துள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் 5 முறை

டெஸ்ட் போட்டிகளில் 5 முறை

60 டெஸ்ட்களில், 101 இன்னிங்ஸ் விளையாடியுள்ள கோஹ்லி, 5 முறை டக் அவுட்டாகியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில், வெஸ்ட் இன்டீஸ் அணியின் கர்ட்னி வால்ஷ் 43 முறை டக் அவுட்டாகி, அதிக போட்டிகளில் டக் அவுட் என்ற சாதனையை நீண்டகாலமாக வைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 6

ஐபிஎல் போட்டிகளில் 6

அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக உள்ள கோஹ்லி ஐபிஎல் தொடரில், 142 போட்டிகளில், 6 முறை டக் அவுட்டாகியுள்ளார்.

Story first published: Wednesday, October 11, 2017, 17:26 [IST]
Other articles published on Oct 11, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற