For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஊரடங்கை மதிக்கலைன்னா இதுதான் கதி.. காவல்துறை அதிரடி.. மும்பையில் நடந்த அந்த சம்பவம்!

மும்பை : மும்பையில் மக்கள் ஊரடங்கின் போது கிரிக்கெட் ஆடியவர்களை கும்பலாக கைது செய்துள்ளது காவல்துறை.

கொரோனா வைரஸ் தக்குதல் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த நாளில் பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அன்று மும்பையில் சிலர் கிரிக்கெட் ஆடி சிக்கி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு

பாதிப்பு

பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. உலகில் இதுவரை 3,40,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,000க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். சில நாடுகளில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

இத்தாலி நிலை

இத்தாலி நிலை

இத்தாலியில் சில வாரங்கள் முன்பு வரை மிகச் சிலரே கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், மக்கள் அங்கே கூட்டம், கூட்டமாக பார்ட்டி கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கு உள்ளிட்ட அரசின் எச்சரிக்கையை அவர்கள் மதிக்கவில்லை.

அமெரிக்காவில் பாதிப்பு அதிகம்

அமெரிக்காவில் பாதிப்பு அதிகம்

அதன் காரணமாக, அங்கே தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. விரைவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் சீனாவை முந்தி முதல் இடத்தை பிடித்து விடும் நிலையில் உள்ளது இத்தாலி. அதே போல, அமெரிக்காவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து 34,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் என்ன நடக்கும்?

இந்தியாவில் என்ன நடக்கும்?

இந்தியாவிலும் இதுபோன்ற ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. தற்போது இந்தியாவில் 370க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுள்ளனர். மக்கள் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக உயரும் அபாயம் உள்ளது.

மக்கள் சுய ஊரடங்கு

மக்கள் சுய ஊரடங்கு

இந்த நிலையில் தான் மார்ச் 22 அன்று மக்கள் சுய ஊரடங்கை அறிவித்தது இந்திய அரசு. அன்றைய தினம் மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

கிரிக்கெட் ஆடினார்கள்

கிரிக்கெட் ஆடினார்கள்

இந்த நிலையில், மும்பையில் சில பகுதிகளில் காவல்துறை ஊரடங்கை அறிவித்து இருந்தது. தானே பகுதி காவல்துறையும் ஊரடங்கை அறிவித்து இருந்தது. எனினும், அதை மீறி மார்ச் 22 அன்று மும்பையில் கல்யாண் பகுதியில் எட்டு பேர் கிரிக்கெட் ஆடி உள்ளனர்.

அனைவரும் கைது

அனைவரும் கைது

அவர்கள் எட்டு பேரையும் மொத்தமாக கைது செய்துள்ளது மும்பை காவல்துறை. இந்த சம்பவத்தால் மக்கள் ஊரடங்கு அன்று வெளியே வந்தால் கைது செய்வார்களா? என்ற குழப்பம் ஏற்பட்டது. இது பற்றி மும்பை காவல்துறை அளித்துள்ளது.

காவல்துறை விளக்கம்

காவல்துறை விளக்கம்

காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், தானே கமிஷனர் அலுவலகம் அறிவித்த தடையை மீறி அவர்கள் வெளியே வந்ததால் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் அவர்கள் மக்கள் ஊரடங்கிற்கு எதிராக நடந்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வேண்டாம்

கிரிக்கெட் வேண்டாம்

ரோட்டில் கிரிக்கெட் ஆடியவர்கள் கும்பலாக கைது

மும்பையில் மக்கள் ஊரடங்கின் போது கிரிக்கெட் ஆடியவர்களை கும்பலாக கைது செய்துள்ளது காவல்துறை. கொரோனா வைரஸ் தக்குதல் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

Story first published: Monday, March 23, 2020, 12:06 [IST]
Other articles published on Mar 23, 2020
English summary
Eight men arrested for playing cricket during Janata Curfew. This incident happened in Kalyan, Mumbai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X