For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள்… யார் அந்த 11 பேர்..? வெளியானது உத்தேச பட்டியல்… இந்தியா ஹேப்பி

எக்பாஸ்டன்: இந்தியாவிற்கு எதிரான முக்கிய போட்டியில், இங்கிலாந்து 2 முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக கோப்பை லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகி விட்டது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தொடரை நடத்தும் இங்கிலாந்து தொடக்கத்தில் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் கடைசியாக இலங்கை, ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் தோல்வியை சந்திருக்கிறது. இந்த 2 ஆட்டங்கள் தான் அந்த அணிக்கு தற்போது பெரும் நெருக்கடியை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

2 மாற்றங்கள்?

2 மாற்றங்கள்?

அரையிறுதிக்கு முன்னேற இன்று இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காயம் காரணமாக விளையாடமல் இருந்த இங்கிலாந்து தொடக்க வீரர் ஜோசன் ராய் இன்றைய போட்டியில் களமிறங்குவார் எனலாம்.

வருகிறார் வின்ச்

வருகிறார் வின்ச்

இதுவரை அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை. ஆனாலும், அவர் அணியில் இடம் பெற வில்லையென்றால் தொடக்க வீரராக வின்ச் களமிறங்குவார். அதேபோன்று இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் தொடையில் சதைபிடிப்பு காரணமாக இன்றைய போட்டியில் விளையாடுவாரா? என்பது கேள்விகுறியாக உள்ளது.

பல்கன்ட் வாய்ப்பு

பல்கன்ட் வாய்ப்பு

ஒருவேளை காயம் காரணமாக ஆர்ச்சர் விலகினால் லியாம் பல்கன்ட் இன்று களமிறங்க வாய்ப்பு உள்ளது. எது எப்படி இருந்தாலும், வழக்கமான தமது அதிரடி பேட்டிங்கை கொண்டு வந்தால் வெற்றிக்கு வாய்ப்பு என்பதை இங்கிலாந்து அணியினர் உணர்ந்துள்ளனர்.

யார்? யார்?

யார்? யார்?

போட்டி நடைபெறும் மைதானம் சேசிங் செய்ய சாதகமானதாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்யும் எனலாம். இங்கிலாந்து உத்தேச அணி : ஜேசன் ராய் ( அ) ஜேம்ஸ் வின்ச், ஜானி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மார்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, வோக்ஸ், அதில் ரஷித், மார்க் உட், ஆர்சர்லியாம் பல்கன்ட்.

Story first published: Sunday, June 30, 2019, 13:29 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
England may go for 2 changes in their 11 member squad against india.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X