For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாஸ் பார்மில் ஜோஸ் பட்லர்.. ஆஸி.க்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்து சாதனை

டி20 போட்டிகளில் அதிவிரைவாக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார்.

லண்டன்: டி20 போட்டிகளில் அதிவிரைவாக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.முதலில் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கெதிராக முதல் முறையாக வொயிட் வாஷ் ஆனது. இந்த நிலையில் தற்போது டி20 தொடர் தொடங்கியுள்ளது.

டி20

டி20

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டி20 போட்டி ,பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது.முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 221 ரன்கள் குவித்தது.ஆஸ்திரேலியா 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றி பெற்றது.

பட்லர் சாதனை

பட்லர் சாதனை

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இப்போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்தார்.ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி 30 பந்துகளில் 61 ரன்களை குவித்தார்.இப்போட்டியில் அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்து, குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சூப்பர் பார்ம்

சூப்பர் பார்ம்

இதற்கு முன்னதாக 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் ரவி போபரா 23 ரன்களில் அரைசதம் அடித்ததே இங்கிலாந்து வீரர்களை பொறுத்தவரையில் சாதனையாக இருந்தது. பட்லர் நேற்று அதனை முறியடித்தார். இரண்டு வீரர்களும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான இதை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பட்லர் ஐபில் போட்டிகளில் இருந்தே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி ஒருநாள் போட்டியில் தனி ஒருவனாக சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் இருப்பது

முதலில் இருப்பது

20 ஓவர் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திலிருப்பது இந்திய அணியின் யுவராஜ் சிங் ஆவார். அவர் 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக இந்த சாதனையை படைத்தார். அது இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. மேலும் இப்போட்டியில் யுவராஜ் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 28, 2018, 17:52 [IST]
Other articles published on Jun 28, 2018
English summary
England player Jose Butler hits the fastest hundred against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X