For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க எதுக்குங்க டீம்ல இருக்கீங்க” பாண்ட்யா காயத்தால் ஸ்ரேயாஸுக்கு சிக்கல்.. விளாசிய சீனியர் வீரர்

மவுண்ட் மௌங்கனி: இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீது நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டௌல் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என முன்னிலையும் பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களிலேயே 126 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. பேட்டிங், பந்துவீச்சு என கலக்கிய வெங்கடேஷ் ஐயர்..ஹர்திக்கிற்கு ஆபத்துதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. பேட்டிங், பந்துவீச்சு என கலக்கிய வெங்கடேஷ் ஐயர்..ஹர்திக்கிற்கு ஆபத்து

பாண்ட்யாவுக்கு காயம்

பாண்ட்யாவுக்கு காயம்

இந்த போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டது தான் பரபரப்பை ஏற்படுத்தியது. கழுத்தில் ஏற்பட்ட பாதிப்பால் அவரால் ஒரு ஓவரை கூட வீசமுடியவில்லை. இதனால் அவரின் ஓவரை தீபக் ஹூடா வீசி, அதில் வெற்றியும் கண்டார். 2.5 ஓவர்களை மட்டுமே வீசிய அவர் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

சைமன் ஃபௌல் விமர்சனம்

சைமன் ஃபௌல் விமர்சனம்

இந்நிலையில் இதுதான் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டௌல் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியில் எப்போதுமே பிரச்சினையாக இருப்பது பவுலிங் மட்டும் தான். ஹர்திக் பாண்ட்யா போன்ற ஒருவர் காயமடைந்துவிட்டால், அடுத்து என்ன செய்வார்கள் என்று பார்த்தால் பதிலே கிடையாது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஷர்துல் தாக்கூர் அவரின் இடத்தை உடனடியாக பூர்த்தி செய்தார். ஆனால் டி20ல் என்ன செய்வார்கள்.

எதற்கு ஸ்ரேயாஸ்?

எதற்கு ஸ்ரேயாஸ்?

ஒரு முழு நேர பேட்ஸ்மேன் அவசரத்திற்கு பந்துவீச தயாராக இருக்க வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர் அங்கு எதற்காக இருக்கிறார்? அவர் ஏன் ஆஃப் ஸ்பின் வீச தயாராக இல்லை. ஒருவேளை இந்திய அணியில் ஸ்பின்னர்கள் தட்டுப்பாடு இருந்தால், முதலில் சென்று ஆஃப் ஸ்பின் வீசுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் அதை செய்வதில்லை. அவரால் அது முடியும். எதிர்கால கிரிக்கெட்டிற்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதை இந்த வீரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பாண்ட்யாவின் பேச்சு

பாண்ட்யாவின் பேச்சு

இதே கோரிக்கையை தான் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் நேற்று முன்வைத்தார். அதில், இந்திய அணியில் நிறைய பவுலிங் ஆஃப்ஷன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பேட்டர்கள் பவுலிங் செய்ய கற்றுக்கொண்டு முன்வர வேண்டும். அப்போது தான் டி20 கிரிக்கெட்டை சமாளிக்க முடியும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Story first published: Monday, November 21, 2022, 13:01 [IST]
Other articles published on Nov 21, 2022
English summary
Ex New Zealand Cricketer Simon Doull slams shreyas iyer after hardik pandya's injury on india vs new zealand 2nd t20 match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X