For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது சின்னப்புள்ளத் தனமா இல்லை? ஒண்ணுமே சாதிக்காதவங்க தான் அப்படி பேசுவாங்க! கம்பீர் செம கலாய்

டெல்லி: இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சில வாரங்கள் முன்பு அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

அதன் பின் அவர் அளித்து வரும் பேட்டிகளில் சில விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இப்போது இந்திய அணியில் ஒரு முக்கியமான நபரை கலாய்த்துள்ளார்.

ரவி சாஸ்திரி சொன்ன கருத்து

ரவி சாஸ்திரி சொன்ன கருத்து

ரவி சாஸ்திரி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை 1-4 என இழந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் இது தான் மிகச் சிறந்த அணி என கருத்து தெரிவித்தார். இந்த கருத்து கடும் விமர்சனத்தை கிளப்பியது.

கம்பீர் கடும் விமர்சனம்

கம்பீர் கடும் விமர்சனம்

இது பற்றி ஒரு பேட்டியில் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "இது மாதிரி கருத்து எல்லாம் வாழ்க்கையில் ஒண்ணுமே செய்யாதவங்க கிட்டே இருந்து தான் வரும்" என தடாலடியாக கூறி ரவி சாஸ்திரியை கலாய்த்துள்ளார் கம்பீர். மேலும், வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் வென்ற அணிகளில் ரவி சாஸ்திரி இருந்ததாக எனக்கு நினைவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த மாதிரி பேசாதீங்க!!

இந்த மாதிரி பேசாதீங்க!!

மேலும், "இங்கிலாந்து தொடரில் இந்தியா 4-1 என வென்று இருந்தால் கூட நீங்கள் இது தான் சிறந்த இந்திய அணி என சொல்லக் கூடாது. அது ரொம்ப சின்னப்புள்ளைத்தனம்" என கூறியுள்ளார் கம்பீர்.

கம்பீர் செய்த சாதனைகள் என்ன?

கம்பீர் செய்த சாதனைகள் என்ன?

ரவி சாஸ்திரியை கலாய்த்த கம்பீர் உண்மையிலேயே பல சாதனைகள் செய்தும் அதை தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. 50 ஓவர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப் போட்டி வெற்றிகளில் கம்பீரின் பங்கு பெரியது. அதே போல டெஸ்ட் தரவரிசையில் இந்தியா நம்பர் 1 இடத்தை பிடித்த போது அணியில் நல்ல பார்மில் இருந்தவர் கம்பீர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை ஏற்று இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார் கம்பீர்.

Story first published: Saturday, December 15, 2018, 15:16 [IST]
Other articles published on Dec 15, 2018
English summary
Gautam Gambhir slams Ravi Shastri for his “best team in 15 years” comments on England tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X