For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கம்பீருக்கு மீண்டும் வாய்ப்பு, பாண்ட்யாவுக்கு முதல் சான்ஸ்! மிரட்ட காத்திருக்கும் இந்திய டெஸ்ட் அணி

By Veera Kumar

மும்பை: இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கவுதம் கம்பீருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.

2 வருடங்களுக்கு பிறகு கவுதம் கம்பீருக்கு சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக முடிவடைந்த 3வது டெஸ்டில்தான் வாய்ப்பு கிடைத்தது. 2வது டெஸ்டின்போதே அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் காயத்தால் அவதிப்பட, 3வது டெஸ்டில் கம்பீருக்கு அடித்தது லக்.

இப்போதும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ராகுல் மற்றும் தவான் காயத்தால் அவதிப்படுவதால், அந்த இடத்துக்கு முரளி விஜயுடன் கம்பீரை களமிறக்க வாய்ப்பாக அவர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரை சதம்

அரை சதம்

இந்தூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் கம்பீருக்கு களம் காண வாய்ப்பு கிடைத்தது. கம்பீர் 2வது இன்னிங்சில் அரைசதம் அடித்து நம்பிக்கையை காப்பாற்றினார். சில தினங்களுக்கு முன்பு ரஞ்சி கிரிக்கெட்டில் ஒடிசாவுக்கு எதிராக 147 ரன்கள் விளாசி மீண்டும் தனது ஃபார்மை பறைசாற்றினார். கம்பீரும் கோஹ்லியை போலவே டெல்லியை சேர்ந்த ஆக்ரோஷ வீரர். திறமையான வீரரும் கூட. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி சிறப்பாக விளையாடினால், தொடர்ந்து சொதப்பிக்கொண்டே வரும் தவானுக்கு நிரந்த குட்பை சொல்லிவிட பிசிசிஐக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பண்ட்யா பலே

பண்ட்யா பலே

அதேநேரம், ஆல்-ரவுண்டர் பாண்ட்யா டெஸ்ட் அணிக்கு வந்துள்ளது அணியை வலிமையாக்கும். ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டராக ஜொலித்து வரும் நிலையில் பாண்ட்யா வேகப்பந்து+பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பார். அஸ்வின் தவிர்த்து வேறு எந்த ஸ்பெஷல் ஸ்பின்னருடனும் டெஸ்ட் போட்டிகளை இப்போது இந்தியா சந்திப்பதில்லை. மற்றொரு ஸ்பின்னராக ஜடேஜா ஃபார்ம் ஆகிவிட்டார். அஸ்வின் நம்பர்-1 பவுலராக இருந்தாலும், அவரும் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது கூடுதல் சிறப்பு.

பலம் வாய்ந்த பேட்டிங்

பலம் வாய்ந்த பேட்டிங்

இப்போது இஷாந்த் அல்லது ஷமி அல்லது உமேஷ் யாதவ் ஆகியோரில் ஒருவரை மட்டுமே வேகப்பந்து வீச்சுக்கு பயன்படுத்திக் கொண்டு மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக பாண்ட்யாவை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே பேட்டிங் வரிசை 10வது வரை நீளும் என்பதால் இது எதிரணிகளுக்கு நிச்சயம் சிம்ம சொப்பனமாக இருக்கப்போகிறது. "எத்தனை பேரைத்தான் நாங்கள் அவுட் செய்வது.." என்ற புலம்பல் சத்தம் எதிரணி பவுலர்களிடமிருந்து கேட்கத்தான் போகிறது.

பாண்ட்யாவின் சாதனை

பாண்ட்யாவின் சாதனை

பாண்ட்யா இதுவரை 16 டி20 போட்டிகளில் ஆடி, 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 78 ரன்கள் சேர்த்துள்ளார். நான்கு, ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங் சராசரி 22.50 ஆகும். இந்த ஆண்டில் அவர் ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களிலும் கலக்கினார்.

Story first published: Wednesday, November 2, 2016, 16:30 [IST]
Other articles published on Nov 2, 2016
English summary
All-rounder Hardik Pandya on Wedesday (Nov 2) got maiden Test call-up as the 15-member Indian Test squad announced for the first two matches against England, starting November 9 in Rajkot. Here's how people reacted on Twitter about Pandya's selection.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X