பாண்ட்யா தலை "பத்திகிச்சே".. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Posted By:

மும்பை: பல்வேறு கெத்துகளில் விதவிதமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹர்திக் பாண்ட்யாவை சிலர் பாராட்டியும், கிண்டல் செய்தும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா ,பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங்கில் பட்டையை கிளப்பும் வீரர் ஆவார். சமீபத்தில் நியுசிலாந்து அணியுடன் விளையாடியபோது பாண்ட்யாவுக்கு கையில் பந்து பட்டு அடிப்பட்டது.

அவருக்கு எந்தவித பெரிய அடியும் படாததை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கைக்கு எதிராக இந்தியா களமிறங்கும் டெஸ்ட் போட்டியில் விளையாட அவரது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.

பாண்ட்யா

பாண்ட்யா

இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளும், ஏராளமான டி20 போட்டிகளும் நடைபெறவுள்ள நிலையில் அவர் அவற்றில் கலந்து கொண்டு பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ ஷூட்

கிரிக்கெட்டின் ஸ்டைல் மன்னன் பாண்ட்யா அவ்வப்போது தனது ஹேர் ஸ்டைல்களை மாற்றுவார். இந்நிலையில் தற்போது சினிமா நடிகர் போன்று போட்டோ ஷூட் எடுத்து அதை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வரவேற்பும், கிண்டலும்...

அதற்கு சில ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சிலர் கிண்டல் செய்துள்ளனர். ரசிகர்களின் கருத்துகளை பார்ப்போம். பாப் பாடகி லேடி காகா ஆண் வேடம் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது என்கிறார் இந்த வலைஞர்.

விரும்புகிறேன்

இந்த ஸ்டைல் நன்றாக உள்ளது. நான் உங்களை விரும்புகிறேன் என்று ஒரு பெண் வலைஞர் கருத்து பதிவிட்டுள்ளார்.

அழகான கதாநாயகன்

வாவ் என்னுடைய அழகான கதாநாயகன்... குங்ஃபூ பாண்ட்யா... உங்களை விரும்புகிறேன் என்று மற்றொரு பெண் ரசிகர் பதிவிட்டுள்ளார்.

Story first published: Monday, November 13, 2017, 11:06 [IST]
Other articles published on Nov 13, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற