For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO: அவரு ரன் எடுக்க போகணுமா? இல்ல பேட்ட எடுக்க போகணுமா? அடிச்ச அடியில் அந்தரத்தில் பறந்த பேட்!

பெங்களூரு: சன் ரைசர்சுக்கு எதிரான போட்டியில் ஹெட்மெயர் அடித்த பந்து மறுமுனையில் இருந்த குர்கீரத் சிங்கின் பேட்டில் பந்து பட்டு பேட் அந்தரத்தில் பறந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஐபிஎல் தொடரின் 54வது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8ல் தோல்வியும், 4ல் வெற்றியும் பெற்று 9 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

மேலும் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பையும் பெங்களூரு அணி இழந்துள்ளது. தொடர்ந்து 10 போட்டிகளில் டாஸ் தோல்வியடைந்து வந்த விராட் கோலி பெங்களூரு அணியின் கடைசி போட்டியில் டாஸ் வென்றது மகிழ்ச்சியைத் தருவதாக கூறியுள்ளார். டாஸ் வென்ற கோலி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

அப்ரிடி ஒரு மெண்டல்..! பைத்தியகார டாக்டருக்கிட்ட அவரை கூட்டிட்டு போறேன்... கம்பீர் பதிலடி! அப்ரிடி ஒரு மெண்டல்..! பைத்தியகார டாக்டருக்கிட்ட அவரை கூட்டிட்டு போறேன்... கம்பீர் பதிலடி!

வில்லியம்சன் 75 ரன்கள்

வில்லியம்சன் 75 ரன்கள்

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு வென்றது

பெங்களூரு வென்றது

இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களின் முடிவில் 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் அதிகபட்சமாக ஹெட்மெயர் 75 ரன்களும், குர்கீரத் சிங் 65 ரன்களும் எடுத்து அசத்தினர்.

சுவாரசிய சம்பவம்

சுவாரசிய சம்பவம்

வழக்கமாக போட்டியின் போது ஏதோவொரு சுவாரசியமான சம்பவங்கள் நடக்கும். எதிர் பாராத ரன் அவுட்டுகள், சர்ச்சையான ஸ்டெம்பிங்குள், சிக்சருக்கு விளாசும் பந்துகள் ஸ்டேடியத்தை விட்டு காணாமல் போவது என்று பல ருசிகர சம்பவங்கள் நடக்கும். ஆனால், இந்த போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவம், இதுவரை நடக்காத ஒன்று கூட என்று சொல்லலாம்.

ரஷித் வீசிய பந்து

ரஷித் வீசிய பந்து

போட்டியின் போது ஒரு முனையில் பெங்களூரு அணி வீரர் ஹெட்மெயர் நின்று கொண்டிருக்கிறார். நான் ஸ்டிரைக் திசையில் குர்கீரத் சிங் நின்று கொண்டு இருக்கிறார். போட்டியின் 5வது ஓவர் அது. பவுலர் ரஷித் கான். அந்த ஓவரின் 5வது பந்தை அவர் வீசுகிறார். 18 ரன்கள் எடுத்திருந்த ஹெட்மெயர் அந்த பந்தை தூக்கி அடிக்கிறார்.

அந்தரத்தில் பறந்த பேட்

பந்து சிக்சருக்கு தான் பறக்கிறது என்று ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க.. மறு முனையில் நின்று கொண்டிருந்த குர்கீரத் சிங் கையில் வைத்திருந்த பேட் அந்தரத்தில் பறந்து சென்று விழுகிறது. என்ன என்று பார்த்தால், ஹெட்மெயரின் பந்து, குர்கீரட் சிங்கின் பேட்டில் பட... ஒரு கணம் பயந்த அவர் பேட்டை அந்தரத்தில் வீசிவிட்டார். பேட் பறக்க, பந்தும் எங்கிருக்கிறது என்று தெரியாமல் அனைவரும் முழிக்க எடுக்க வேண்டிய ஒரு ரன்னையும் எடுக்காமல் குழம்பித் தான் போனார் குர்கீரத் சிங். இப்போது இணையத்தில் இந்த வீடியோ தான் டாப்.

Story first published: Sunday, May 5, 2019, 13:48 [IST]
Other articles published on May 5, 2019
English summary
Hetmyer smashes ball into partner Gurkeerat, his bat flies away.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X