For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.யை அலறவிட்டு.. அதிரடி சாதனை படைத்த ஹிட் மேன்...!! குவியும் வாழ்த்துகள்

Recommended Video

அதிரடி சாதனை படைத்த ஹிட் மேன்...!! குவியும் வாழ்த்துகள்

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புதிய சரித்திரம் படைத்த ஹிட் மேன் ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓவல் மைதானத்தில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டன. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட் செய்ய களமிறங்கிய தொடக்க வீரர்கள் ரோகித் சர்மாவும் தவானும் அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 15 ஓவர்களை கடந்தும் சிறப்பாக ஆடினர். நிதானமாக ரன்ரேட் குறையாமல் ஆடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ரோகித் 57 ரன்கள்

ரோகித் 57 ரன்கள்

இந்த போட்டியில்... ஹிட் மேன் ரோகித் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம்.... அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களுக்கு மேல் அடிக்கும் வீரர் ரோகித் சர்மா தான்.

4வது வீரர் ஆனார்

4வது வீரர் ஆனார்

சச்சின் டெண்டுல்கர், ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோருக்கு அடுத்ததாக 4வது வீரராக இந்த மைல்கல்லை ரோகித் எட்டியுள்ளார். சச்சினுக்கு அடுத்த 2வது இந்திய வீரர் ரோகித் சர்மா.

யாருமே இல்லை

யாருமே இல்லை

டிராவிட், கங்குலி, தோனி, கோலி ஆகியோர் கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களை அடிக்கவில்லை. ரோகித்துக்கு முன்னதாக சச்சின், விவியன், ஹெய்ன்ஸ் ஆகியோரை தவிர யாருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களை குவிக்கவில்லை. ஆனால்... ரோகித் அந்த சாதனையை உடைத்து தள்ளி இருக்கிறார்.

இரட்டை சத சாதனை

இரட்டை சத சாதனை

ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை விளாசியவர் ரோகித் சர்மா. தமது முதல் இரட்டை சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் அடித்தார். அது மட்டுமல்லாமல் 2013ம் ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து ஆடிய தொடரில் ரோகித் சர்மா அபாரமாக ஆடி சதங்களை குவித்தவர்.

முதலிடம்

முதலிடம்

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2000+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்( 3077 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். ஹெய்னஸ் (2262 ரன்கள்), வி.வி ரிச்சர்ட்ஸ் (2187 ரன்கள்), ரோகித் சர்மா (2003 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.

குறைவான இன்னிங்ஸ்

குறைவான இன்னிங்ஸ்

ஒரு அணிக்கு எதிராக மிக குறைந்த இன்னிங்ஸில் 2000+ ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ரோகித் தான் முதலிடம். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 37 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் (40 இன்னிங்ஸ்), ரிச்சர்ட்ஸ்(44 இன்னிங்ஸ்), கோலி (44 இன்னிங்ஸ்), தோனி(45 இன்னிங்ஸ்) ஆகியோரும் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர்.

Story first published: Sunday, June 9, 2019, 18:33 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
Hit man rohit sharma made a new record against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X