For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு அவர் தான் வேணும்.. அடம்பிடித்த கம்பீர்.. அணியின் தலைஎழுத்தை மாற்றிய சம்பவம்!

கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் துவக்கம் முதலே அதிக ரசிகர்களை ஈர்த்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

Recommended Video

How Gambhir picks Sunil Naraine?

அந்த அணியின் கேப்டனாக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின்னரே அந்த அணி இரண்டு முறை கோப்பை வென்றது.

அவர் கேப்டன் ஆன அடுத்த ஆண்டு குறிப்பிட்ட ஒரு வீரரை அணியில் வாங்கியே ஆக வேண்டும் என அடம் பிடித்துள்ளார். அது கொல்கத்தா அணிக்கு பெரும் திருப்புமுனையை அளித்தது.

பெரிய ரிஸ்க்.. ஐபிஎல் தொடரை வைத்து காசு பார்க்கத் தயார் ஆகும் நாடு.. சிக்கலில் பிசிசிஐ!பெரிய ரிஸ்க்.. ஐபிஎல் தொடரை வைத்து காசு பார்க்கத் தயார் ஆகும் நாடு.. சிக்கலில் பிசிசிஐ!

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2008 ஐபிஎல் முதல் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு இருந்தது. பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கானின் அணி என்பதும், பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட சௌரவ் கங்குலி ஆடுகிறார் என்பதும் முக்கிய காரணமாக இருந்தது.

கேப்டன் ஆன கம்பீர்

கேப்டன் ஆன கம்பீர்

2008 முதல் 2010 வரை அந்த அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை. இதை அடுத்து அணியில் பெரிய மாற்றத்தை செய்ய விரும்பிய அந்த அணி ஆக்ரோஷமான வீரராக அறியப்படும் கௌதம் கம்பீரை கேப்டனாக நியமித்தது. அவர் வந்த உடன் 2011 ஐபிஎல் தொடரில் அந்த அணி பிளே-ஆஃப் வரை முன்னேறியது.

அடம்பிடித்த கம்பீர்

அடம்பிடித்த கம்பீர்

அடுத்து ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் வாங்குவது குறித்து விவாதம் நடந்து வந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சுனில் நரைன்-ஐ வாங்கியே தீர வேண்டும் என இந்திய அணியுடன் சுற்றுப் பயணத்தில் இருந்த கௌதம் கம்பீர் அடம் பிடித்துள்ளார்.

கம்பீர் முடிவு

கம்பீர் முடிவு

2011 சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் ட்ரினிடாட் அண்டு டோபாகோ அணியில் ஆடிய சுனில் நரைன், மொத்தமாக 15 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அந்த அணியின் வெற்றியில் அவர் பங்களிப்பு அதிகம் இருந்தது. அப்போதே நரைனை கொல்கத்தா அணியில் தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டார் கம்பீர்.

அவர் வேண்டும்

அவர் வேண்டும்

அதனால், என்ன நடந்தாலும் சுனில் நரைனை ஏலத்தில் வாங்குங்கள். என் அணியில் அவர் நிச்சயம் இடம் பெற வேண்டும் என கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்திடம் உறுதியாக கூறி இருக்கிறார்.

ஏலத்தில் எடுத்தது

ஏலத்தில் எடுத்தது

2012 ஐபிஎல் ஏலத்தில் சுனில் நரைனை ஏலத்தில் தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை அந்த அணி வென்றது. நரைன் அந்த சீசனில் 24 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அத்துடன் நிற்கவில்லை.

அதிக விக்கெட்கள்

அதிக விக்கெட்கள்

அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2014 ஐபிஎல் கோப்பை வென்ற போது அவர் 21 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இதுவரை ஐபிஎல் தொடரில் 122 விக்கெட்கள் வீழ்த்தி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் எட்டாம் இடத்தில் இருக்கிறார்.

முக்கிய வீரர் நரைன்

முக்கிய வீரர் நரைன்

கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட்டு பிரிந்தாலும், அவர் தேர்வு செய்த சுனில் நரைன் இன்று வரை அந்த அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். பேட்டிங்கிலும் கூட சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஐபிஎல் கோப்பைகள்

இரண்டு ஐபிஎல் கோப்பைகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கம்பீர் இரண்டு ஐபிஎல் கோப்பைகள் பெற்றுக் கொடுத்தார், அதன் பின் அந்த அணி இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. எனினும், அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது.

Story first published: Saturday, August 1, 2020, 13:14 [IST]
Other articles published on Aug 1, 2020
English summary
Gautam Gambhir picks Sunil Naraine in KKR, which turns out to be a best decision of the franchise.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X