For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிவி பார்த்தேன்… அப்புறமா இப்படி பண்ணினேன்..! நம்பர் 1 பவுலராக மாறிட்டேன்.!! ரகசியம் சொன்ன வீரர்

மும்பை: டிவி பார்த்து தான் பவுலிங்கை கற்றுக் கொண்டேன் என்று ஸ்டார் பவுலர் பும்ரா கூறியிருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக இளம்வயதில் அறிமுகமான பும்ரா தொடர்ந்து சிறப்பாக ஆட, அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது இருக்கும் பவுலர்களில் டெத் ஓவர்களில் எந்த எதிரணியையும் கலங்கடிக்கும் வீரர் பும்ரா தான்.

அவரது பந்துவீச்சில் ரன்கள் குவிப்பது கடினம். இந்திய அணிக்கு நுழைந்த ஆரம்பத்திலிருந்தே தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமானவராக இருந்தார்.

நம்பர் 1 பவுலர்

நம்பர் 1 பவுலர்

உலகின் நம்பர் 1 பவுலர் என்ற பெயரையும் எடுத்துள்ள பும்ரா இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக அனைவராலும் புகழப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது சிறுவயது பந்துவீச்சை முறை ரகசியத்தை கூறி இருக்கிறார்.

டிவியில் கற்றுக் கொள்வேன்

டிவியில் கற்றுக் கொள்வேன்

அவர் கூறியதாவது : நான் சிறுவயதில் உலகில் உள்ள அனைத்து முன்னணி பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் விதத்தை டிவியில் பார்ப்பேன். அதனை அவர்களை போலவே செய்து பார்ப்பேன். தினமும் நான் கிரிக்கெட் விளையாடும் பொழுது ஒவ்வொரு வீரர் போன்றும் பந்து வீச முயற்சி செய்வேன். அதனை தொடர்ந்து பின்பற்றி வந்தேன்.

வேகம் அதிகரித்தது

வேகம் அதிகரித்தது

அதன்பிறகு நான் வளரும் காலத்தில் எனக்கென ஒரு பவுலிங் ஸ்டைல் உருவாக்கினேன். அதை அப்படியே பின்பற்ற தொடங்கியதால் என்னுடைய திறன் அதிகரித்தது. பிறகு தொடர் பயிற்சியால் என் வேகமும் அதிகரித்தது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

இன்று உலகின் நம்பர் 1 பவுலராக நான் இருக்க என்னுடைய தொடர் பயிற்சி தான் முக்கிய காரணம். என்னுடைய பந்துவீசும் முறையை மாற்றி கொள்ளாமல் அதிலேயே முன்னேற்றம் அடைய நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன் என்றார்.

Story first published: Sunday, August 4, 2019, 10:37 [IST]
Other articles published on Aug 4, 2019
English summary
I have learned bowling techniques by watching tv says jasprit bumrah.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X