For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி 2018 விருதுகள் அறிவிப்பு.. வரலாறு படைத்த கோலி.. வேறு யார் யாருக்கு விருது?

Recommended Video

ஐசிசி 2018 விருதுகள் அறிவிப்பு: வரலாறு படைத்த கோலி- வீடியோ

துபாய் : 2018ஆம் ஆண்டிற்கான ஐசிசி கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டும் இந்திய வீரர்கள் விருதுகள் வென்று அசத்தியுள்ளனர்.

அதிலும், இந்திய அணியின் கேப்டன் கோலி மூன்று முக்கிய விருதுகளையும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் என்ற அந்தஸ்தையும் பெற்று அசத்தியுள்ளார். முழு விருதுப் பட்டியலையும் பார்ப்போம்.

சிறந்த அம்பயர் விருது

சிறந்த அம்பயர் விருது

ஐசிசி 2018க்கான சிறந்த அம்பயர் விருது குமார் தர்மசேனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2012இல் சிறந்த அம்பயர் விருது வென்ற தர்மசேனா இரண்டாம் முறையாக சிறந்த அம்பயர் விருது வென்றுள்ளார்.

சிறந்த அசோசியேட் அணி வீரர்

சிறந்த அசோசியேட் அணி வீரர்

ஐசிசி 2018 சிறந்த அசோசியேட் அணி வீரர் விருதை ஸ்காட்லாந்து அணியின் காலெம் மெக்லியாட் வென்றார். அவர் ஆப்கன் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்ற போட்டிகளில் சதம் அடித்து இருந்தார்.

சிறந்த வளர்ந்து வரும் வீரர்

சிறந்த வளர்ந்து வரும் வீரர்

ஐசிசி 2018 சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதை இந்தியாவின் ரிஷப் பண்ட் வென்று அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், அடிலெய்டு டெஸ்ட்டில் 11 கேட்ச்கள் அதிக கேட்ச் பிடித்த சாதனையை சமன் செய்தது உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக பண்ட் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்று அசத்தியுள்ளார். பேட்டிங்கிலும் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்.

ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்

ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்

ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் (கிரிக்கெட்டின் ஆன்மா) விருதை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் வென்றார். அவர் களத்திலும், களத்துக்கு வெளியேயும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்வதாக ஐசிசி கூறியுள்ளது.

சிறந்த டி20 செயல்பாடு

சிறந்த டி20 செயல்பாடு

சிறந்த டி20 செயல்பாடாக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்-சின், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ரன்கள் அடித்தது தேர்வாகி உள்ளது. சாதனை சதமான அதில், பின்ச் 16 ஃபோர் மற்றும் 10 சிக்ஸர்கள் அடித்து தெறிக்கவிட்டார்.

சிறந்த ஒருநாள் போட்டி வீரர்

சிறந்த ஒருநாள் போட்டி வீரர்

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருதை வென்றுள்ளார் கோலி. 2018இல் 1202 ரன்கள் அடித்து இருந்தார். இதன் சராசரி 133.55 ஆகும். மேலும், 2018இல் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 10,000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையையும் புரிந்தார்.

சிறந்த டெஸ்ட் வீரர்

சிறந்த டெஸ்ட் வீரர்

சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் கோலியே வென்றுள்ளார். ஒருநாள் போட்டிகள் போன்றே டெஸ்ட் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த வீரர் கோலி தான். 2018இல் 1322 ரன்கள் அடித்து இருந்தார். இத சராசரி 55.08 ஆகும்.

2௦18இன் சிறந்த வீரர் யார்?

2௦18இன் சிறந்த வீரர் யார்?

ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் இரண்டிலும் சிறந்த வீரர் விருது வென்ற கோலி, 2௦18இன் சிறந்த வீரர் விருதையும் வென்று அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக அதிக சர்வதேச ரன்கள் அடித்தவரும் கோலி தான். 37 போட்டிகளில், 47 இன்னிங்க்ஸ்களில் 2735 ரன்கள் அடித்தார் கோலி. இதன் சராசரி 68.37 ஆகும். இதில் 11 சதம், 9 அரைசதம் அடங்கும்.

புதிய வரலாறு

புதிய வரலாறு

கோலி மூன்று சிறந்த வீரர் விருதுகளையும் அள்ளியதோடு, 2018 ஐசிசி டெஸ்ட் அணி மற்றும் 2018 ஐசிசி ஒருநாள் அணியிலும் இடம் பெற்று கேப்டன் அந்தஸ்தை பெற்றுள்ளார். இதுவரை எந்த வீரரும் ஒரே ஆண்டில் இந்த ஐந்து பெருமைகளையும் பெற்றதில்லை. இதன் மூலம் கோலி புதிய வரலாறை உருவாக்கியுள்ளார்.

Story first published: Tuesday, January 22, 2019, 14:04 [IST]
Other articles published on Jan 22, 2019
English summary
ICC awards 2018 - complete list of winners, best player, best ODI and test team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X