For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடரும் சர்ச்சை.. சிக்கல்.. எவ்வளவு நன்றாக ஆடியும்.. பும்ராவிற்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

இந்திய அணியில் மிக சிறப்பாக பந்து வீசியும் கூட பும்ராவால் சில முக்கியமான சாதனைகளை செய்ய முடிவதில்லை.

லண்டன்: இந்திய அணியில் மிக சிறப்பாக பந்து வீசியும் கூட பும்ராவால் சில முக்கியமான சாதனைகளை செய்ய முடிவதில்லை. இதனால் பும்ரா சிக்கல் ஒன்றில் மாட்டி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையில் நடக்கும் இந்த லீக் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்து கலங்கடித்து உள்ளது. இந்த இமாலய இலக்கை நோக்கை இந்திய அணி பொறுமையாக ஆடி வருகிறது.

 விக்கெட்

விக்கெட்

இந்திய அணி சார்பாக முகமது ஷமி மிக சிறப்பாக பந்து வீசினார். இவர் மொத்தம் 5 விக்கெட் எடுத்தார். கடந்த இரண்டு போட்டிகளிலும் தலா 4 விக்கெட்டுகள் இவர் எடுத்தார். இதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் விரைவில் இவர் முதலிடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பும்ரா எப்படி

பும்ரா எப்படி

அதே சமயம் பும்ரா மிகவும் புத்தியசாலிதனமாக பந்து வீசினார். இவர் 10 ஓவரில் 44 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஒரு ஓவருக்கு தலா 4 ரன்கள் வீதம் மட்டுமே இவர் கொடுத்தார். இதனால் இந்திய அணி கடைசி ஐந்து ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் இங்கிலாந்தை கட்டுப்படுத்த முடிந்தது. இவர் மொத்தமாக இந்த போட்டியில் ஒரே ஒரு பவுண்டரிதான் கொடுத்தார்.

 டெத் என்ன

டெத் என்ன

இவர் கடைசியாக வீசிய 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். இதில் ஒரு விக்கெட் வேறு எடுத்தார். இவர் கடைசியாக போட்ட 30 டெத் ஓவர்களில் ஓரே ஒரு ஓவரில் மட்டும்தான் 10 ரன்களை வீட்டுக் கொடுத்து இருக்கிறார். அந்த அளவிற்கு இவர் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார் .

 ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இவர் சரியாக விக்கெட் எடுப்பதில்லை என்று புகார் உள்ளது. இவரது பந்தை எதிரணி வீரர்கள் தொடுவதே இல்லை. இதனால் இவர் ஓவரில் பெரும்பாலும் விக்கெட் விழுவதே இல்லை. அதே சமயம் ரன்னும் செல்வதில்லை. இதனால் இவர் உலகின் நம்பர் 1 பவுலராக இருந்தும் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

முடியவில்லை

முடியவில்லை

இந்த உலகக் கோப்பை தொடரிலும் இவர் இதுவரை சரியாக விக்கெட் எடுக்கவில்லை, போட்டியை இவர் விக்கெட்டுகள் பெரிதாக மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தொடருக்கு பின் இவர் ஐசிசி நம்பர் ஒன் ஒருநாள் பவுலர் என்ற பட்டத்தை ஸ்டார்க்கிடம் அல்லது ஆர்ச்சரிடம் இழக்க கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இவர் அதிகமாக விக்கெட் எடுக்க கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

Story first published: Sunday, June 30, 2019, 21:37 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
ICC World Cup 2019: Bumrah failed to take wickets at important times when the team needs against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X