For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஷீத்தின் கூக்லி.. ஸ்டெம்பில் பட்ட பந்து.. ஆனாலும் விக்கெட் கொடுக்காத அம்பயர்.. பகீர் சம்பவம்!

நேற்று தென்னாப்பிரிக்கா இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விழுந்த விக்கெட் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

World cup 2019: SA vs ENG | ஸ்டெம்பில் பட்ட பந்து! ஆனாலும் விக்கெட் கொடுக்காத அம்பயர்- வீடியோ

லண்டன்: நேற்று தென்னாப்பிரிக்கா இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விழுந்த விக்கெட் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் கடைசியில் அம்பயர் அதற்கு விக்கெட் கொடுக்கவில்லை என்பதுதான் இதில் டிவிஸ்டே. நேற்று இங்கிலாந்திற்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் இடையில் போட்டி நடந்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 311 ரன்களை எடுத்தது.

தென்னாபிரிக்கா அணி 39.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் தென்னாபிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

களத்தில் திடீர் என்று காணாமல் போன ஜோ ரூட்.. அதிர்ச்சி அடைந்த இங்கிலாந்து அணி.. சுவாரசிய வீடியோ! களத்தில் திடீர் என்று காணாமல் போன ஜோ ரூட்.. அதிர்ச்சி அடைந்த இங்கிலாந்து அணி.. சுவாரசிய வீடியோ!

 ஏன் அந்த சம்பவம்

ஏன் அந்த சம்பவம்

இந்த நிலையில் இந்த போட்டியில் 11வது ஓவரில்தான் அந்த சம்பவம் நடைபெற்றது. அந்த ஓவரை இங்கிலாந்து பவுலர் அடில் ரஷீத் போட்டார். அதுவரை ரஷீத் எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை. இதனால் அவர் விக்கெட்டு எடுக்கும் முனைப்பில் இருந்தார். இதனால் அதற்கு ஏற்றபடி பந்துகளை வீசி வந்தார்.

 டி காக் பேட்டிங்

டி காக் பேட்டிங்

அப்போதுதான் 11 வது ஓவரில் தென்னாபிரிக்கா வீரர் டி காக் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். ரஷீத் போட்ட பந்து ஒன்று, காக் பேட்டில் பட்டு ஸ்டெம்பில் விழுந்தது. இதனால் ஸ்டெம்பில் இருக்கும் எல்இடி விளக்குகள் எரிந்தது. இதனால் விக்கெட் என்று நினைத்துக் கொண்டு இங்கிலாந்து கீப்பர் பட்லர் பந்தை பிடிக்கவில்லை.

 பவுண்டரி சென்றது

பவுண்டரி சென்றது

இதனால் அந்த பந்து பவுண்டரி சென்றது. இதையடுத்து அம்பயர் பவுண்டரி கொடுத்தார். ஆனால் அவர் விக்கெட் கொடுக்கவில்லை. இது இங்கிலாந்து வீரர் எல்லோரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே இங்கிலாந்து வீரர்கள் அம்பயரிடம் சென்று வாக்குவாதம் செய்தனர்.

ஏன் விக்கெட்

ஏன் நீங்கள் விக்கெட் கொடுக்கவில்லை. பந்து ஸ்டெம்பில் பட்டது தெளிவாக தெரிகிறது. ஆனாலும் ஏன் விக்கெட் கொடுக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தனர். ஆனால் அம்பயர் அப்போதும் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டனர்.

 பெயில்ஸ் இல்லை

பெயில்ஸ் இல்லை

அந்த பந்து ஸ்டெம்பில் பட்டது உண்மைதான். ஆனாலும் பெயில்ஸ் கீழே விழவில்லை. இதனால்தான் விளக்கு எரிந்தும் கூட விக்கெட் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

 ரன் எடுத்தார்

ரன் எடுத்தார்

இதனால்தான் அந்த பாலில் தென்னாப்பிரிக்கா அணிக்கு பவுண்டரி கொடுக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் வருத்தத்திற்கு உள்ளானார்கள். அதன்பின் டி காக் 68 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த போட்டியில் கடைசியில் இங்கிலாந்து அணிதான் வென்றது.

Story first published: Friday, May 31, 2019, 13:48 [IST]
Other articles published on May 31, 2019
English summary
ICC World Cup 2019: De Cock not given wicket in Adil Rashid Googly - Here is the reason behind it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X